கரூர் எம்.பி மொபைல் எண்ணை ப்ளாக் பண்ணிய கலெக்டர்

karur
Last Modified சனி, 22 ஜூன் 2019 (20:57 IST)
கரூர் மாவட்டத்தில் தண்ணீர் பிரச்சினை குறித்து மக்களிடம் கருத்து கேட்கும் முகாம் நடைபெற்றது. கரூர் ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற இந்த கூட்டத்தில் மாவட்ட ஆட்சியர் அன்பழகன் மற்றும் சில அதிமுக பிரமுகர்கள் பங்கேற்றனர்.

இதில் கரூர் எம்.பி ஜோதிமணி மற்றும் அரவக்குறிச்சி எம்.எல்.ஏ செந்தில்பாலாஜி பங்கு பெறாதது விமர்சனத்துக்குள்ளானது. இதற்கு பதிலளித்த ஜோதிமணி “ கரூர் ஆட்சியர் எனது மொபைல் எண்ணை ப்ளாக் செய்து வைத்துள்ளார். எவ்வளவு முயற்சி செய்தும் அவரை தொடர்பு கொள்ள முடியவில்லை. ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற கூட்டத்தில் கலந்து கொள்ள எனக்கும், செந்தில்பாலாஜிக்கும் அழைப்பு விடுக்காதது கண்டிக்கத்தக்கது” என அவர் தெரிவித்துள்ளார்.இதில் மேலும் படிக்கவும் :