வியாழன், 25 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: சனி, 22 ஜூன் 2019 (19:39 IST)

நான் அவன் இல்லை- பட ஸ்டைலில் பெண்களை ஏமாற்றிய நபர்

திருமண வலைதளங்கள் மூலம் பெண்களை பிடித்து ஏமாற்றி 9 கோடி ரூபாய் வரை சுருட்டிய நபரை போலீஸார் கைது செய்துள்ளனர்.

திருவண்ணாமலை பகுதியை சேர்ந்தவர் சக்ரவர்த்தி. பி.இ பட்டதாரியான இவர் சொந்தமாக தொழில் தொடங்க முயற்சி செய்துள்ளார். ஆனால் வறுமையின் காரணமாக அது முடியவில்லை. தனக்கு சொந்தமான சொத்தை விற்றுதான் பி.இ படித்திருக்கிறார். பிறகு சென்னை குரோம்பேட்டையில் தங்கியபடி தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வந்துள்ளார். அப்போது அவருடன் தங்கியிருந்த அரசு அலுவலர் ஒருவர் இணையத்தில் பெண்களை எப்படி கரெக்ட் செய்வது என்பதை சக்ரவர்த்திக்கு சொல்லிக் கொடுத்திருக்கிறார்.

அதன்பிறகு சக்கரவர்த்தியின் ஆட்டம் ஆரம்பமாகியிருக்கிறது. இணையத்தில் வயது முதிர்ந்த பெண்கள், மறுமணத்திற்கு காத்திருக்கும் பெண்கள் போன்றோரை பிந்தொடர்ந்து அதில் வசதியானவர்களிடம் பழக ஆரம்பித்திருக்கிறார். அவர்களிடம் ஆசை வார்த்தை காட்டி நேரில் சந்திக்கலாம் என கேட்டுள்ளார். இவரின் ஆசை வார்த்தைகளில் மயங்கிய பெண்களும் இவரை சந்தித்து மகிழ்ச்சியாக இருந்துள்ளனர். அடிக்கடி தொழில் நிமித்தம் அவசர செலவுக்கென பணம் கேட்டுள்ளார். தன் எதிர்கால கணவன்தானே கேட்கிறார் என அவர்களும் தாராளமாய் வாரி வழங்கியுள்ளனர். அந்த பணத்தில் சென்னையில் இரண்டு பங்களா, மூன்று கார்கள் என சக்கரவர்த்தியாகவே வாழ்ந்திருக்கிறார் சக்கரவர்த்தி.

இதேபோல சென்னையில் உள்ள ஒரு பெண் டாக்டரை இவர் ஏமாற்றியிருக்கிறார். அப்போதுதான் போலீஸில் மாட்டியிருக்கிறார். விசாரணையில் தனது அனைத்து குற்றங்களையும் ஒப்புக்கொண்டுள்ளார் சக்கரவர்த்தி. தான் ஏமாற்றிய பெண்களில் 3 பெண்களோடு திருமணம் செய்து வாழ்ந்து வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.