1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sinoj
Last Modified: புதன், 8 பிப்ரவரி 2023 (23:33 IST)

உடற்கல்வி இயக்குநரால் பெருமை பெற்றது கரூர் அரசு கலைக்கல்லூரி.

karur
அரசு கலைக்கல்லூரிக்கு தேசிய தரமதிப்பீட்டு குழு பாராட்டு – உடற்கல்வி இயக்குநரால் பெருமை பெற்றது கரூர் அரசு கலைக்கல்லூரி.
 
கரூர் அரசுகலைக்கல்லூரியின் உடற்கல்வி இயக்குநர் ராஜேந்திரனுக்கு குவியும் பாராட்டுகள்.
 
கரூர் தாந்தோன்றிமலை அரசு கலைக்கல்லூரியில் பணியாற்றும் உடற்கல்வி இயக்குநர் ராஜேந்திரன் அவர்களுடைய வித்யாச விழிப்புணர்வு பதாகைகளால் மாணவர்கள் உற்சாகம் அடைந்தனர்.
 
கரூர் அரசு கலைக்கல்லூரியின் உடற்கல்வி இயக்குநராக இருப்பவர் ராஜேந்திரன், இவர் உடற்கல்வி பயிலும் மாணவர்களுக்கு ஒரு வரப்பிரசாதம் தான் என்று சொல்ல வேண்டும், மேலும், இவர்  மாணவர்களுடன் சேர்ந்து விளையாடுவதும், பயிற்சி கொடுப்பதும் மட்டுமில்லாமல், தன்னுடைய சொந்த செலவில் பல லட்சங்கள் செலவு செய்து விளையாட்டு மைதானங்களை மேம்படுத்தி கொடுத்துள்ளார். ஏழை, எளிய மாணவர்களுக்கும் பல உதவிகள் செய்து வரும் இவரை போல உடற்கல்வி இயக்குநர் ராஜேந்திரனை போல யாரும் கிடைப்பது அரிது என்றும் பலர் பாராட்டி வருகின்றனர். மேலும், கரூர் அரசு கலைக்கல்லூரியில் மாணவர்களை ஊக்கப்படுத்தும் விதமாக தேசிய, மாநில அளவில் விளையாட்டு போட்டியில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளின் படங்களையும் ஊக்குவிக்கும் பொருட்டு பதாகைகளாக வைத்துள்ளார். இதுமட்டுமில்லாமல், தமிழக அரசு, விளையாட்டு துறைக்கு என்ன என்ன செய்து வருகின்றது என்பது குறித்தும் அதை மாணவ, மாணவிகள் ஸ்போர்ட்ஸ் கோட்டாவில் வேலை வாய்ப்புகள் பெறுவது எப்படி என்றும் பதாகைகளை விழிப்புணர்விற்காக, கரூர் அரசு கலைக்கல்லூரியின் விளையாட்டு குழுவின் அனுமதி பெற்றும் வைத்துள்ளார்

.இதுமட்டுமில்லாமல், கல்லூரி முதல்வர் 15 தினங்கள் தான் OD தருவேன் என்று கூறுவதும் மற்றும் விளையாட செல்ல கூடாது என்று சில ஆசிரியர்கள் கூறுவதும் விளையாட்டு மாணவர்களுக்கு மிகுந்த மன உளைச்சலை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில், தற்போது விளையாட்டினை ஊக்குவித்து வரும் தமிழக அரசு, கரூர் அரசு கலைக்கல்லூரியின் மாணவ, மாணவிகள் நலனை கருத்தில் கொ9ண்டு கல்லூரிக்கு தனி குழுவினை அனுப்பி விசாரித்தால் தான் என்ன நடக்கின்றது. என்பது தெரிய வரும் என்கின்றனர் சமூக நல ஆர்வலர்களும், விளையாட்டு வீர்ர்களும், முன்னாள் மாணவர்களும் கோரிக்கை விடுத்துள்ளனர்.  
 
இந்நிலையில், கடந்த 2022 ம் ஆண்டு செப்டம்பர் மாதம் கல்லூரிக்கு வந்த தேசிய தர மதிப்பீட்டு குழு (NAAC) கரூர் தாந்தோன்றிமலை அரசு கலைக்கல்லூரியில் உடற்கல்வித்துறை சிறப்பாக உள்ளது என்றும் கல்லூரியில் அமைத்துள்ள பதாகைகள் மாணவர்களை ஊக்குவிக்கும் பொருட்டும், உடனடியாக உடற்கல்வித்துறை சார்ந்த பாடப்பிரிவுகளை தொடங்க வேண்டும் என்று கல்லூரி முதல்வருக்கும், அரசிற்கும்  அறிவுறுத்தியதாக கூறப்படுகின்றது