1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sugapriya Prakash
Last Modified: புதன், 6 ஜூலை 2022 (15:47 IST)

அமெரிக்கா சென்ற TR... பூரண குண்மடைந்ததாக தகவல்!

மேல் சிகிச்சைக்காக அமெரிக்கா சென்ற இயக்குனர் டி.ராஜேந்தர் பூரணமாக குணமடைந்துள்ளார் என தகவல் வெளியாகியுள்ளது. 
 
இயக்குனரும் சிம்புவின் தந்தையும் இயக்குநர் மற்றும் நடிகர் டி ராஜேந்தர் கடந்த சில நாட்களுக்கு முன்பு உடல் நலக்குறைவு காரணமாக சிகிச்சை பெற அமெரிக்கா சென்றார். வயிற்றுப் பகுதியில் ஏற்பட்டுள்ள ரத்தக் கசிவுக்கு வெளிநாட்டில் சிகிச்சை பெற மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ள நிலையில், அமெரிக்காவில் அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. 
 
இந்நிலையில் மேல் சிகிச்சைக்காக அமெரிக்கா சென்ற இயக்குனர் டி.ராஜேந்தர் பூரணமாக குணமடைந்துள்ளார் என தகவல் வெளியாகியுள்ளது. வயிற்றில் ரத்தக்கசிவு காரணமாக அமெரிக்கா சென்ற டி.ராஜேந்தர் சிகிச்சை முடிந்து தற்போது நலமுடன் உள்ளார் எனவும் அமெரிக்காவில் ஒருமாதம் தங்கி ஓய்வெடுக்க உள்ளதாக தகவல் தெரிவிக்கின்றன.