Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine

நிர்மலா தேவி விவகாரத்தில் கைதான கருப்பசாமியின் ஜாமீன் மனு தள்ளுபடி!

k
Last Updated: வெள்ளி, 18 மே 2018 (18:50 IST)
c.
 
அருப்புக்கோட்டையில் மதுரை பல்கலைக்கழகத்தின் கீழ் செயல்படும் ஒரு தனியார் கல்லூரியில் பயிலும் 4 மாணவிகளிடம் தவறாக பேசிய பேராசிரியை நிர்மலா தேவியின் ஆடியோ வெளியாகி பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இதனால் நிர்மலா தேவி கைது செய்யப்பட்டார். 
 
இந்த விவகாரத்தில் பேராசிரியை நிர்மலாதேவிக்க்கு துணைபோன துணை பேராசிரியர் முருகன் என்பவரும், ஆராய்ச்சி மாணவர் கருப்பசாமி என்பவரும் சிபிசிஐடி போலீசாரால் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். இதற்கிடையே முருகன் மற்றும் கருப்பசாமி தங்களை ஜாமீனில் விடுவிக்க கோரி ஸ்ரீவில்லிபுத்தூர் விரைவு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர். 
 
அவர்களது மனுவை விசாரித்த நீதிபதி, கருப்பசாமியின் ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்தார். மேலும், முருகனின் ஜாமீன் மனுவை 25ம் தேதி தள்ளிவைத்து உத்தரவிட்டார்.


இதில் மேலும் படிக்கவும் :