Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine

தொண்டர்களை நாளை சந்திக்கவிருக்கும் கருணாநிதி!

cm
Last Modified சனி, 13 ஜனவரி 2018 (11:29 IST)
பொங்கலை முன்னிட்டு திமுக தலைவர் கருணாநிதி, நாளை (ஜனவரி 14) கட்சி தொண்டர்களை சந்திக்க உள்ளார்.
ஒவ்வொரு ஆண்டும் பொங்கல் திருநாளில் கட்சி தொண்டர்களை சந்தித்து, ரூ.10 வழங்குவது கருணாநிதியின் வழக்கம். உடல் நலக்குறைவு காரணமாக கடந்த ஆண்டு அவர் தொண்டர்களை சந்திக்கவில்லை. இந்நிலையில் டாக்டர்களின் ஆலோசனைக்கு பிறகு, நாளை தொண்டர்களை சந்திக்க உள்ளார். காலை 11 மணிக்கு கோபாலபுரம் இல்லத்தில் தொண்டர்களை சந்திக்கும் கருணாநிதி, தொண்டர்களுக்கு புதிய ரூ.50 வழங்க உள்ளார். கருணாநிதியை சந்திக்க வரும் தொண்டர்கள் அவருக்கு பூங்கொத்து கொடுப்பதை தவிர்க்க வேண்டும் என கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.
 
தனது ஆட்சி காலத்தில் தை மாத பிறப்பை தமிழ் புத்தாண்டு என அறிவித்தவர் கருணாநிதி. நீண்ட இடைவெளிக்குப் பிறகு தொண்டர்களை கருணாநிதி சந்திக்க இருப்பதால் ஏராளமானோர் சந்திக்க வருவார்கள் எனவும் இது திமுக தொண்டர்களுக்கு நிச்சயம் பொங்கல் பரிசாக அமையும் என கூறப்படுகிறது. 


இதில் மேலும் படிக்கவும் :