நான் ஏன் தனிக்கட்சி தொடங்க வேண்டும்: தினகரன்

Last Modified சனி, 13 ஜனவரி 2018 (00:25 IST)
சென்னை ஆர்.கே.நகர் எம்.எல்.ஏ தினகரன் இன்று செய்தியாளர்களை சந்தித்தபோது, அவரிடம் தனிக்கட்சி ஆரம்பிக்க வேண்டும் என்ற எண்ணம் உள்ளதா? என செய்தியாளர்கள் கேட்டனர்.

அதற்கு பதிலளித்த தினகரன், நான் ஏன் தனிக்கட்சி ஆரம்பிக்க வேண்டும். அதிமுகவின் ஒன்றரை கோடி தொண்டர்களில் 95% எங்களுக்கு ஆதரவாகத்தான் உள்ளனர். இன்னும் மாற்று கட்சியில் இருந்தும் இளைஞர்களும் எங்கள் கட்சியில் சேர விருப்பம் தெரிவித்துள்ளனர்.

எனவே தனிக்கட்சி தொடங்குவேனா? அதிமுகவை கைப்பற்றுவேனா? என்பதை இப்போது சொல்ல முடியாது. பொறுத்திருந்து பாருங்கள்' என்று தினகரன் கூறினார்

webdunia

இதில் மேலும் படிக்கவும் :