செவ்வாய், 7 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By sinoj
Last Updated : திங்கள், 11 மார்ச் 2024 (19:53 IST)

தமிழில் சிறந்த மொழி பெயர்ப்பாளருக்கான சாகித்ய அகாடமி விருது அறிவிப்பு

sakithya academy
தமிழில் சிறந்த மொழி பெயர்ப்பாளருக்கான சாகித்ய அகாடமி விருதுக்கு எழுத்தாளர் கண்ணையன் தட்சிணாமூர்த்தி தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
 
2024 ஆம் ஆண்டிற்கான தமிழில் சிறந்த மொழி பெயர்ப்பாளருக்கான சாகித்ய அகாடமி  இன்று அறிவிக்கப்பட்டுள்ளது.
 
அதில், ஃபிரெஞ்சுப் பாதிரியாரின் அனுபவத்தையும் பழங்குடி பண்பாட்டையும் விளக்கும் (THE BLACK HILL) எனும் நாவலை கருங்குன்றம் என்ற தலைப்பில் மொழி பெயர்த்த எழுத்தாளர்  கண்ணையன் தட்சிணாமூர்த்தி தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
 
அவருக்கு எழுத்தாளர்கள், அரசியல் தலைவர்கள் உள்ளிட்ட் பலரும் வாழ்த்துகள் கூறி வருகின்றனர்.
 
இந்த நிலையில், அமமுக பொதுச்செயலாளர் தினகரன் தெரிவித்துள்ளதாவது:
 
''ஃபிரெஞ்சுப் பாதிரியாரின் அனுபவத்தையும் பழங்குடி பண்பாட்டையும் விளக்கும் (THE BLACK HILL) எனும் நாவலை கருங்குன்றம் என்ற தலைப்பில் மொழி பெயர்த்து சாகித்ய அகாடமி விருதுக்கு தேர்வாகியிருக்கும் திரு. கண்ணையன் தட்சிணா மூர்த்தியின் ஆக்கப்பூர்வமான எழுத்துப் பணிகள் தொடர எனது வாழ்த்துக்களையும் தெரிவித்துக் கொள்கிறேன்''என்று தெரிவீத்துள்ளார்.
.