புதன், 25 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: புதன், 27 பிப்ரவரி 2019 (10:48 IST)

விஜயகாந்த் வீட்டிற்கு கனிமொழி விசிட் – கூட்டணியை உறுதி செய்வாரா ?

தேமுதிக வைத் தங்கள் கூட்டணிக்குள் கொண்டு வர போராடி வரும் திமுக அடுத்தக் கட்ட முயற்சியாக கனிமொழி விஜயகாந்த் சந்திப்பிற்கு ஏற்பாடு செய்துள்ளதாகக் கூறப்படுகிறது.

அதிமுக பாஜக மற்றும் பாமக உடனானக் கூட்டணி இறுதியானவுடன் தேமுதிகவைப் பெரியளவில் கண்டுகொள்ளாமல் இருந்தது. இது குறித்து தேமுதிக பெரியளவில் நம்பிய பாஜகவும் தேமுதிகவை டீலில் விட்டது. அதனால் திடமான ஆதரவு இல்லாமல் தேமுதிக தத்தளிக்க ஆரம்பித்தது. அதனால் தொகுதிப் பங்கீட்டில் குறைவானத் தொகுதிகளே வழங்கப்படும் என அதிமுக சார்பில் பேச்சுவார்த்தையில் கூறப்பட்டுள்ளது.

அதனால் அதிருப்தியடைந்திருந்த தேமுதிகவை தங்கள் பக்கம் இழுக்க முயற்சித்து வருகிறது திமுக கூட்டணி. இது தொடர்பாக திமுக கூட்டணியில் உள்ள காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் திருநாவுக்கரசர் மற்றும் திமுக தலைவர் ஸ்டாலின் ஆகியோர் விஜயகாந்தை அவரது இல்லத்தில் சந்தித்து பேசினர். இந்த சந்திப்பு விஜயகாந்தின் உடல்நலம் விசாரித்தல் என்றுக் கூறப்பட்டாலும் அந்த சந்திப்புகளில் அரசியலும் பேசப்பட்டதாக விஜயகாந்தின் மனைவி பிரேமலதா தெரிவித்துள்ளார்.

அதனால் திமுக மற்றும் அதிமுக கூட்டணியில் எதில் சேர்வது என்ற குழப்பத்தில் உள்ளது தேமுதிக. திமுக வின் இந்த திடீர் முடிவால் தேமுதிக ஒன்றிரண்டு சீட்களை உயர்த்திக் கொடுக்க அதிமுகவும் முன்வந்துள்ளதாகத் தெரிகிறது. அதனால் தேமுதிகவைத் தங்கள் பக்கம் இழுக்க இரண்டுக் கட்சிகளும் முயற்சி செய்துவருகின்றனர்.

இதனால் திமுக தேமுதிக உடனானக் கூட்டணியினை உறுதி செய்ய தங்கள் கட்சி சார்பாக கனிமொழியை பேச்சுவார்த்தைக்கு அனுப்ப முடிவு செய்துள்ளதாகக் கூறப்படுகிறது. அதனால் விரைவில் கனிமொழி மற்றும் விஜயகாந்த் சந்திப்பு நடக்கும் எனவும் அதன்பின்னர் தேமுதிக உடனானக் கூட்டணி உறுதி செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.