வியாழன், 2 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Mahendran
Last Modified: செவ்வாய், 28 டிசம்பர் 2021 (15:19 IST)

சென்னை சங்கமம் நிகழ்ச்சிக்கு பதில் நம்ம ஊரு திருவிழாவா? கனிமொழி அப்செட்!

சென்னை சங்கமம் நிகழ்ச்சிக்கு பதிலாக நம்ம ஊரு திருவிழா என்ற நிகழ்ச்சி நடத்த தமிழக அரசு திட்டமிட்டுள்ளதாக வந்த தகவல் கனிமொழி எம்பி அப்செட் ஆகி உள்ளதாக கூறப்படுகிறது. 
 
கடந்த 2007 ஆம் ஆண்டு திமுக ஆட்சி நடைபெற்ற போது கனிமொழியின் முயற்சியால் உருவானது சென்னை சங்கமம் என்ற நிகழ்ச்சி
 
இந்த நிகழ்ச்சி நல்ல வரவேற்பை பெற்ற நிலையில் திமுக ஆட்சி முடிவுக்கு வந்ததும் இந்த நிகழ்ச்சி தொடர வில்லை 
 
இந்த நிலையில் தற்போது திமுக ஆட்சி மீண்டும் வந்ததை அடுத்து சென்னை சங்கமம் நிகழ்ச்சியை நடத்த கனிமொழி திட்டமிட்டிருந்தார். ஆனால் அதே தேதிகளில் தமிழக அரசின் சார்பில் நம்ம ஊரு திருவிழா என்ற நிகழ்ச்சி நடைபெறும் என அமைச்சர் தங்கம் தென்னரசு அறிவித்துள்ளார். இதனால் கனிமொழி வட்டாரங்கள் கடும் அப்செட்டில் இருப்பதாக திமுக வட்டாரங்கள் கூறுகின்றன