1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By siva
Last Updated : வெள்ளி, 26 நவம்பர் 2021 (13:09 IST)

தூத்துக்குடி மக்களே, இந்த அவசர எண்ணை தொடர்பு கொள்ளுங்கள்: கனிமொழி அறிவிப்பு!

தூத்துக்குடி மாவட்டத்தில் கடந்த இரண்டு நாட்களாக மிக கனமழை பெய்து வருகிறது என்பதும் இன்னும் அம்மாவட்டத்தில் கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாகவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது
 
இந்த நிலையில் தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள சுமார் 10 ஆயிரம் வீடுகள் வெள்ளத்தில் சிக்கி உள்ளது என்றும் அதில் இருந்த மக்கள் பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது.
 
இந்த நிலையில் தூத்துக்குடி திமுக எம்பி கனிமொழி அவர்கள் தனது ட்விட்டர் பக்கத்தில் கன மழையால் பாதிக்கப்பட்ட தூத்துக்குடி மாவட்ட மக்கள் பேரிடர் நேரத்தில் எனது அலுவலக அவசர எண்ணை தொடர்பு கொள்ளுங்கள் என்று அறிவித்துள்ளார் 
 
தூத்துக்குடி மாவட்ட மக்களுக்கு அவசர உதவி எண் என்று  9176437040 என்றும் அவர் அறிவித்துள்ளார். இந்த எண்ணை 24 மணி நேரமும் தொடர்பு கொள்ளலாம் என்றும் அவர் அறிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது