வியாழன், 26 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By siva
Last Updated : செவ்வாய், 17 நவம்பர் 2020 (11:20 IST)

தரமற்ற பேருந்து கண்ணாடி: ஆள்பவர்கள் அடித்தது எத்தனை கோடி? கனிமொழி

தமிழகத்தில் கடந்த சில நாட்களாக மழை பெய்து வரும் நிலையில் இந்த மழையால் சில ஊழல்களும் வெளிப்பட்டு வருகின்றன. நேற்று புதிய பேருந்து ஒன்றில் மழை நீர் ஒழுகியதை அடுத்து பேருந்துக்குள் உட்கார்ந்து பயணம் செய்து கொண்டிருந்த பயணிகள் குடை பிடித்துக்கொண்டு பயணம் செய்தனர் என்பது குறித்த செய்தி புகைப்படத்துடன் வெளிவந்தது இதனை கிண்டலடித்து மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமலஹாசன் டுவிட் ஒன்றை பதிவு செய்திருந்தார் என்பதை ஏற்கனவே பார்த்தோம்
 
இந்த நிலையில் தற்போது அரசு போக்குவரத்து கழகங்களில் புதிய பேருந்துகளில் பொருத்தப்பட்டுள்ள கண்ணாடிகள் தரமற்றவை ஆக இருப்பதால் மழை நேரத்தில் சாலையை தெளிவாக பார்க்க முடியாமல் ஓட்டுநர்கள் திணறி வருவதாக செய்திகள் வெளிவந்துள்ளது இதனால் ஓட்டுநர்கள் 10 கிலோ மீட்டர் வேகத்தில் மட்டுமே பேருந்தை ஓட்ட நேர்ந்தது என்ற செய்தி அனைவரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது
 
இந்த நிலையில் இதுகுறித்து தனது டுவிட்டரில் குறிப்பிட்டுள்ள கனிமொழி பொதுமக்கள் உயிரை பணயம் வைத்து இதில்  ஆள்பவர்கள் சம்பாதித்தது எத்தனை கோடி? என்று கேள்வி எழுப்பியுள்ளார் 
 
ஒவ்வொரு ஆண்டும் மழைக்காலத்தில் ஆண்டுதோறும் 2200 விபத்துக்கள் நடந்து வருவதாகவும் 3,500 பேர் காயமடைந்ததாகவும் கனிமொழி தனது டுவிட்டரில் குறிப்பிட்டுள்ளார். பொதுமக்களை பொதுமக்கள் உயிரை பணயம் வைத்து இதில் ஆள்பவர்கள் சம்பாதித்தது எத்தனை கோடி என கனிமொழி எழுதியுள்ள கேள்வியால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது