1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sugapriya Prakash
Last Updated : செவ்வாய், 5 ஜனவரி 2021 (12:05 IST)

யார் இந்த ஊழல் ராணி... டிவிட்டரை தெறிக்கவிடும் ஹேஷ்டேக்!!

சமூக வலைத்தளமான டிவிட்டரில் #HBD_ஊழல்_ராணி என்ற ஹேஷ்டேக் டிரெண்டாக்கப்பட்டு வருகிறது.

 
திமுக மகளிர் அணி செயலாளர் கனிமொழி எம்.பி. இன்று தனது பிறந்த நாளை எளிமையாக கொண்டாடினார். கருணாநிதியின் உருவப்படத்துக்கு மாலை அணிவித்து வணங்கி விட்டு தாயார் ராஜாத்தி அம்மாளிடம் ஆசி பெற்றார்.
 
அதன் பிறகு மெரினா கடற்கரையில் உள்ள அண்ணா, கருணாநிதி நினைவிடத்துக்கு சென்று மலர் தூவி மரியாதை செலுத்தினார். அங்கிருந்து திமுக தலைவர் முக ஸ்டாலின் வீட்டுக்கு சென்றார். அங்கு ஸ்டாலினிடம் பிறந்த நாள் வாழ்த்து பெற்றார். 
 
இந்நிலையில் சமூக வலைத்தளமான டிவிட்டரில் #HBD_ஊழல்_ராணி என்ற ஹேஷ்டேக் டிரெண்டாக்கப்பட்டு வருகிறது. காலை முதலே இந்த ஹேஷ்டேக் டிரெண்டாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த ஹேத்கேட்டின் கீழ் 2ஜி வழக்கு குறித்த விமர்சனங்களும் பதிவிடப்பட்டு வருகின்றன.