வெள்ளி, 27 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By siva
Last Updated : வெள்ளி, 25 டிசம்பர் 2020 (21:29 IST)

மேலும் இரண்டு பாராளுமன்ற தொகுதிக்கு இடைத்தேர்தல் வரும்: ஹெச்.ராஜா

கன்னியாகுமரி தொகுதி எம்பி வசந்தகுமார் அவர்கள் கடந்த சில மாதங்களுக்கு முன்னர் உடல்நலக்குறைவு காரணமாக காலமானார் என்பதால் அந்த தொகுதிக்கு விரைவில் தேர்தல் வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அனேகமாக சட்டமன்ற தேர்தலுடன் கன்னியாகுமரி பாராளுமன்ற தொகுதி இடைத்தேர்தல் நடைபெறலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது 
 
இந்த நிலையில் திடீரென மேலும் இரண்டு தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் வரும் என்ற நம்பிக்கை தனக்கு இருப்பதாக ஹெச்.ராஜா அவர்கள் கூறியிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இதுகுறித்து அவர் மேலும் கூறியதாவது:
 
தற்போது 2ஜி வழக்கில் வரும் 31ம் தேதி தீர்ப்பு வரும் என்றும் அப்போது நீலகிரி மற்றும் தூத்துக்குடி ஆகிய இரண்டு பாராளுமன்ற தொகுதிக்கு இடைத்தேர்தல் வரும் என்ற நம்பிக்கை தனக்கு இருப்பதாகவும் குறிப்பிட்டுள்ளார் 
 
நீலகிரி தொகுதியில் ஆ ராசாவும் தூத்துக்குடி தொகுதியில் கனிமொழியும் எம்பியாக உள்ளனர் என்பதும் இவர்கள் இருவரும் இதுதான் 2ஜி வழக்கில் குற்றம் சாட்டப்பட்டு உள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது ஹெச். ராஜாவின் இந்த கருத்து பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது