வியாழன், 7 நவம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sugapriya Prakash
Last Modified: திங்கள், 15 ஆகஸ்ட் 2022 (11:03 IST)

தலைமரைவாக இருந்த கனல் கண்ணன் கைது!

பெரியார் சிலை குறித்து சர்ச்சையாக பேசிய ஸ்டண்ட் மாஸ்டரும், இந்து முன்னணி நிர்வாகியுமான கனல் கண்ணன் கைது.

 
சமீபத்தில் சினிமா ஸ்டண்ட் மாஸ்டரும் பாஜக நிர்வாகியுமான கனல் கண்ணன் பாஜக கூட்டம் ஒன்றில் பேசியபோது, பெரியார் சிலையை உடைப்பது குறித்து பேசியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. ஆம் ஸ்ரீரங்கம் கோவில் வாசலில் உள்ள பெரியார் சிலையை உடைத்து அகற்றுகின்ற நாள் தான் இந்துக்களில் எழுச்சி நாளாக இருக்கும் என பேசினார்.

இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வரும் நிலையில் பலரும் கனல் கண்ணன் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறி வந்தனர். இந்நிலையில் தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினர் அளித்த புகாரில் கனல் கண்ணன் மீது போலீஸார் ஒரு பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்த மத்திய குற்றப்பிரிவு சைபர் கிரைம் போலீஸார், தலைமறைவாக உள்ள அவரை தேடி வருகின்றனர்.

இதனைத்தொடர்ந்து சென்னை அமர்வு நீதிமன்றத்தில் கனல் கண்ணன் சார்பில் முன் ஜாமீன் மனு தாக்கல் செய்யப்பட்டது. அவருக்கு முன் ஜாமீன் வழங்கக்கூடாது என காவல்துறை சார்பில் வாதிடப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம் கனல் கண்ணன் மீதான குற்றச்சாட்டுக்கு ஆதாரம் உள்ளதாக கூறி அவரின்  முன் ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்யப்பட்டது.

இந்நிலையில் பெரியார் சிலை குறித்து சர்ச்சையாக பேசிய ஸ்டண்ட் மாஸ்டரும், இந்து முன்னணி நிர்வாகியுமான கனல் கண்ணன் கைது செய்யப்பட்டார். தலைமறைவாக இருந்த அவரை புதுச்சேரியில் வைத்து சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் கைது செய்தனர்.