செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Prasanth Karthick
Last Modified: வெள்ளி, 1 மே 2020 (10:41 IST)

வாழ்க்கை தாமதமாகலாம்; தடைபடாது! – கமல்ஹாசன் மே தின வாழ்த்து!

மே முதல் நாளான இன்று உலக தொழிலாளர்கள் தினமாக கொண்டாடப்படும் நிலையில் கமல்ஹாசன் தொழிலாளர்களுக்கு வாழ்த்துகளை தெரிவித்துள்ளார்.

மே முதல் நாள் உலகம் முழுவதும் உலக தொழிலாளர்கள் தினமாக கொண்டாடப்படுகிறது. தற்போது கொரோனா பாதிப்புகள் காரணமாக ஊரடங்கு அமலில் உள்ளதால் தொழிலாளர்கள் வாழ்க்கை பெரிதும் பாதிப்புக்கு உள்ளாகியிருக்கிறது. இந்நிலையில் அவர்களுக்கு ஆதரவாக ட்விட்டரில் பதிவிட்டுள்ள மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் ” நாட்டின் பொருளாதாரத்தை கட்டமைத்திடும் ஒவ்வொரு தொழிலாளியின், தனி பொருளாதாரமும் பலப்பட வாழ்த்துகிறேன். உழைப்பை மூலதனமாக்கி உயரும் வாழ்வு தாமதமாகலாம், தடைபடாது. இந்நிலை மாறும், தொழிலாளர் வாழ்வு ஏற்றம் பெறும். நம்பிக்கையுடன்..” என்று தெரிவித்துள்ளார்.