செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Prasanth Karthick
Last Modified: சனி, 18 ஏப்ரல் 2020 (10:08 IST)

யார் மொட்டைமாடி அரசு? நீங்களா? நாங்களா? – கமலை பங்கம் செய்யும் எச்.ராஜா!

கொரோனா பாதிப்புகளுக்கு மத்திய அரசு சரியாக நடவடிக்கை எடுக்கவில்லை என தெரிவித்த கமல்ஹாசனுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக பதிவிட்டுள்ளார் எச்.ராஜா

கொரோனா பாதிப்பு இந்தியாவில் அதிகரித்து வரும் நிலையில், பாதுகாப்பு நடவடிக்கையாக மத்திய, மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன. இந்நிலையில் டெல்லி, மகாராஷ்டிரம் போன்ற பகுதிகளில் உள்ள புலம்பெயர் தொழிலாளர்களுக்கு அடிப்படை வசதிகள் இல்லாததால் நடைபயணமாகவே சொந்த ஊர்களுக்கு பயணிக்க தொடங்கியுள்ளனர்.

இதுகுறித்து சில நாட்களுக்கு முன்பு பதிவிட்ட மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் மத்திய அரசை மொட்டைமாடி அரசு என குறிப்பிட்டிருந்தார். கமல்ஹாசனின் பதிவுக்கு தற்போது பதில் அளித்துள்ள தமிழக பாஜக செயலாளர் எச்.ராஜா “மொட்டை மாடி அரசா? இந்தியாவின் மூன்றில் இரண்டு பங்கு மக்களால் பெரும்பான்மையாக தேர்ந்தெடுக்கப்பட்ட அரசை 65 வருட காலமாக பணம் ஈட்டுவதில் மும்முரமாய் இருந்த பால்கனி பையன் விமர்சிக்கிறார். மத்திய அரசு ஏழை மக்களுக்கு உதவ 1.7 லட்சம் கோடி ஒதுக்கியுள்ளது” என்று தெரிவித்துள்ளார்.