வியாழன், 23 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: வெள்ளி, 4 ஜனவரி 2019 (08:47 IST)

திருவாரூர் தொகுதியில் போட்டியா? கமல் அறிவிப்பு

திருவாரூர் தொகுதியில் போட்டியிடும் திமுக, அதிமுக மற்றும் அமமுக வேட்பாளர்கள் இன்று அறிவிக்கப்படவிருக்கும் நிலையில் இந்த தேர்தலில் போட்டியிடுவதா? வேண்டாமா? என்பது குறித்து இன்னும் இரண்டு நாட்களில் முடிவெடுக்கவுள்ளதாக மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் அறிவித்துள்ளார்.

இன்று அதிகாலை சிங்கப்பூரில் இருந்து சென்னை திரும்பிய கமல்ஹாசன் சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது 'திருவாரூர் தொகுதியில் போட்டியிடுவது குறித்து கட்சி நிர்வாகிகளிடம் ஆலோசனை செய்து நாளை அல்லது நாளை மறுநாள் முடிவு செய்யவுள்ளதாக தெரிவித்தார்.

ஏற்கனவே அதிமுக, திமுக, அமமுக, நாம் தமிழர் கட்சி என நான்குமுனை போட்டி இருக்கும் நிலையில் நிலையில் கமல்ஹாசனும் இந்த இடைத்தேர்தலில் களம்புகுவாரா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்