செவ்வாய், 26 நவம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: வெள்ளி, 3 ஏப்ரல் 2020 (20:40 IST)

டார்ச்சுக்கே இப்போதுதான் பிரதமர் வருகிறார்: கமல் கிண்டல்

டார்ச்சுக்கே இப்போதுதான் பிரதமர் வருகிறார்: கமல் கிண்டல்
பிரதமர் நரேந்தி மோடி அவர்கள் இன்று காலை நாட்டு மக்களிடம் உரையாற்றிய போது வரும் 5-ஆம் தேதி நாட்டு மக்கள் ஒவ்வொருவரும் தங்கள் வீட்டில் உள்ள அனைத்து விளக்குகளையும் அணைத்துவிட்டு பால்கனிக்கு வந்து அகல் விளக்குகள் ஏற்ற வேண்டும் என்றும் அல்லது மொபைல் டார்ச் அல்லது டார்ச் லைட்டை ஒளிவிட செய்ய வேண்டுமென்றும் கேட்டுக்கொண்டார் இதன் மூலம் நாட்டு மக்கள் அனைவரும் ஒற்றுமையாக இருப்பதை நிரூபிக்கலாம் என்றும் அவர் கூறினார் 
 
பிரதமரின் இந்த யோசனையை ஒரு சில அரசியல்வாதிகள் மற்றும் நெட்டிசன்கள் கேலியும் கிண்டலும் செய்தாலும் பலரும் கண்டிப்பாக செய்வதாக உறுதியளித்தனர். இது குறித்து சமூக வலைதளங்களில் சில விவாதங்களும் நடைபெற்றன என்பது குறிப்பிடத்தக்கது
 
இந்த நிலையில் உலக நாயகன் நடிகரும் மக்கள் நீதிக் கட்சியின் தலைவருமான கமலஹாசன் அவர்கள் இது குறித்து தனது டுவிட்டர் பக்கத்தில் கிண்டலுடன் கூடிய ஒரு ட்வீட்டை பதிவு செய்துள்ளார். அதில் அவர் கூறியதாவது:
 
பிரதமர் பேசுகிறார் என்றதும் நான் அதிகம் எதிர்பார்த்தேன். பாதுகாப்புக்கவசங்கள் தட்டுப்பாடுக்கான தீர்வு, அத்தியாவசிய பொருட்கள் தட்டுப்பாடின்றி விநியோகம், ஏழைமக்களின் வாழ்வாதாரம், வருங்கால பொருளாதார நடவடிக்கை என, ஆனால் நாம் என்றோ கையில் எடுத்த டார்ச்சுக்கே அவர் இன்றுதான் வருகிறார்