மக்கள் நீதி மய்யத்தின் நிர்வாக பொதுக்குழு கூட்டம் – சென்னையில் தொடங்கியது!

Last Updated: வெள்ளி, 16 அக்டோபர் 2020 (10:56 IST)

கமல்ஹாசன் தலைமையிலான மக்கள் நீதி மய்யத்தின் நிர்வாகக் குழு கூட்டம் இன்று காலை சென்னையில் உள்ள நட்சத்திர விடுதியில் தொடங்கியுள்ளது.

கமல் மக்கள் நீதிமய்யம் கட்சியை ஆரம்பித்து 3 ஆண்டுகளை கடந்துள்ள நிலையில் அடுத்த ஆண்டு சட்டசபைத் தேர்தலை எதிர்கொள்ள இருக்கிறார். இதுவரை எந்த கட்சியோடும் கூட்டணி அமைக்காத கமல் இன்று சென்னையில் உள்ள நட்சத்திர ஹோட்டல் ஒன்றில் கட்சியின் நிர்வாகக் குழுவினரின் கூட்டத்தை தொடங்கியுள்ளார்.

இதில் சட்டசபைத் தேர்தலை எதிர்கொள்வது குறித்து ஆலோசனை நடத்தப்படுவதாக சொல்லப்படுகிறது.இதில் மேலும் படிக்கவும் :