திமுக தேர்தல் அறிக்கை தயாரிப்பு குழு கூட்டம் !

Sugapriya Prakash| Last Modified புதன், 14 அக்டோபர் 2020 (09:18 IST)
திமுக தேர்தல் அறிக்கை தயாரிப்பு குழு கூட்டம் இன்று காலை அண்ணா அறிவாலயத்தில் நடைபெறுகிறது.
 
தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் அடுத்த ஆண்டின் மே மாதம் நடைபெற உள்ளது. இதற்காக இப்போதே தமிழக அரசியல் கட்சிகள் தயாராகி வருகின்றது. முன்னதாக திமுக செயற்குழு கூட்டத்தில் முக்கிய நிர்வாகிகள் நியமிக்கப்பட்ட நிலையில் தற்போது தேர்தல் அறிக்கை தயாரிப்பதில் ஆர்வம் காட்டி வருகிறது.  
 
இதற்காக தேர்தல் அறிக்கை தயாரிக்கும் குழுவை திமுக பொது செயலாளர் துரைமுருகன் நியமித்துள்ளார். இந்த குழுவில் டி.ஆர்.பாலு, சுப்புலட்சுமி ஜெகதீசன், திருச்சி சிவா, ஆ.ராசா, கனிமொழி, அந்தியூர் செல்வராஜ், டி.கே.எஸ்.இளங்கோவன் ஆகியோர் இடம் பெற்றுள்ளார்.
 
இதனிடையே திமுக தேர்தல் அறிக்கை தயாரிப்பு குழு கூட்டம் இன்று காலை அண்ணா அறிவாலயத்தில் நடைபெறுகிறது. தேர்தல் அறிக்கை தயாரிப்பு குழுவின் ஒருங்கிணைப்பாளர் டி.ஆர்.பாலு தலைமையில் இந்த கூட்டம் நடைபெறவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. 


இதில் மேலும் படிக்கவும் :