புதன், 25 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Updated : சனி, 22 டிசம்பர் 2018 (14:48 IST)

கூட்டணிக்கு ரெடி: ஆனா யார் கூட..? தயங்குகிறாரா கமல்?

கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம் கட்சியின் செயற்குழு கூட்டம் இன்று சென்னை ஆழ்வார்ப்பேட்டையில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் வரும் நாடாளுமன்ற தேர்தல் மற்றும் இடைத்தேர்தல் குறித்து ஆலோசிக்கப்பட்டது. 
 
இந்த செயற்குழு கூட்டத்திற்கு பின்னர் கமல் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தது பின்வருமாறு, நல்ல வழியில் நல்ல கூட்டணி ஒன்று அமையும். ஒத்த கருத்துள்ள கட்சிகளுடன் மட்டுமே கூட்டணி அமைய வேண்டும் என்பதில் எங்கள் கட்சியும் நானும் திடமாக உள்ளோம். 
 
லோக்சபா தேர்தலில் 40 தொகுதிகளுக்கு வேட்பாளர்களை தேர்ந்தெடுக்க ஒரு குழு அமைத்திருக்கிரோம். அதற்கு தலைமை பொறுப்பை டாக்டர் மகேந்திரனிடம் ஒப்படைத்துள்ளோம். அதற்கான வேலைகளை இன்று முதல் துவங்கும். 
 
எந்தெந்த கட்சிகள் எல்லாம் எங்கள் கூட்டணியில் இருக்கும் என்பதை இப்போது சொல்ல வேண்டிய அவசியம் இல்லை என்று கருதுகிறேன். 
 
எங்களுடைய பிரச்சாரம் என்பது தமிழகம் முன்னேற்றம் நோக்கியதாக இருக்கும். தமிழருக்கு இழைக்கப்பட்ட அநீதிகளை நேர் செய்ய நேரம் வந்துவிட்டது. அதுதான் எங்கள் பிரச்சாரத்தின் கூர்மையாக இருக்கும் என தெரிவித்துள்ளார்.