1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sugapriya Prakash
Last Updated : புதன், 22 ஜனவரி 2020 (16:09 IST)

வீரத்தின் உச்சகட்டம்... ரஜினிக்காக குரல் கொடுக்கிறாரா கமல்?

வீரத்தின் உச்சகட்டம் அகிம்சை என மக்கள் நீதி மய்யம் டிவிட்டர் பக்கத்தில் பதிவிட்டிருப்பது யாருக்கானது என்பது விவாதத்திற்கு உள்ளாகியுள்ளது.  
 
ரஜினிகாந்த் எந்த ஒரு விஷயத்தை கூறினாலும் அது குறித்து ஒரு வாரம் விமர்சனம் செய்ய வேண்டும் என்பதை தலையாக கடைமையாக கொண்டுள்ளதை போல சமீபத்தில் துக்ளக் ஆண்டு விழாவில் பெரியார் குறித்து ரஜினிகாந்த் பேசியதை அனைத்து அரசியல் கட்சி தலைவர்களும் விமர்சனம் செய்து வருகின்றனர். 
 
ஆனால், மக்கள் நீதி மையம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன்  இந்த விஷயத்தில் இன்னும் கருத்து தெரிவிக்கவில்லை. ரஜினி தனக்கு நெருங்கிய நண்பராக இருந்தாலும் அவ்வப்போது அவர் மறைமுகமாக ரஜினியை விமர்சனம் செய்து வருவதை வழக்கமாகக் கொண்டிருப்பவர் கமல். 
ஆனால் கடந்த சில மாதங்களாக ரஜினியுடன் இணைந்து அவர் அரசியல் செய்ய வாய்ப்பு இருப்பதாக கூறப்படுவதால் ரஜினியை பகைத்துக் கொள்ள அவர் விரும்பவில்லை என்பதால் அவர் அமைதியாக இருப்பதாக கூறப்படுகிறது. 
 
இந்த சூழலில், அவரின் கட்சி ஒரு ட்வீட் பதிவிட்டுள்ளது. வீரத்தின் உச்சகட்டம் அகிம்சை என்று நடிகர் கமல்ஹாசன் கூறிய ஒன்றை, அவரின் புகைப்படத்தோடு அக்கட்சி ட்விட்டரில் பதிவிட்டுள்ளது. ஆனால், இந்த பதிவு யாருக்கானது என்பதுதான் புரியவில்லை. 
 
ஒரு சாரார் இது ரஜினிக்கு என்றும் மீதமுள்ளோர் ரஜினியை எதிர்ப்பவர்களுக்கு என்றும் தங்களது கருத்துக்களை முன்வைத்து வருகின்றனர்.