வெள்ளி, 27 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Mahendran
Last Updated : சனி, 16 ஏப்ரல் 2022 (08:48 IST)

பச்சைப்பட்டு உடுத்தி வைகை ஆற்றில் இறங்கினார் கள்ளழகர்!

Kallalagar
மதுரை சித்திரை திருவிழாவின் முக்கிய நிகழ்வான கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கும் வைபவம் சற்றுமுன் நிகழ்ந்தது
 
வைகை ஆற்றில் பச்சை பட்டு உடுத்தி தங்க குதிரை வாகனத்தில் கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கினார். வைகை ஆற்றில் கள்ளழகர் இறங்கும் போது பக்தர்கள் ஆடிப்பாடி தண்ணீர் பீச்சி அடித்து கள்ளழகரை வரவேற்றனர் 
 
கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கும் வைபவத்தை ஆயிரக்கணக்கானோர் வைகை ஆற்றின் கரையில் நின்று பார்த்து அழகரை தரிசித்தனர். இந்த நிகழ்வுக்காக ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு இருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது