1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Prasanth Karthick
Last Modified: புதன், 13 ஏப்ரல் 2022 (11:03 IST)

சித்திரா பௌர்ணமியில் சதுரகிரி யாத்திரை! – வனத்துறை அனுமதியால் பக்தர்கள் மகிழ்ச்சி!

Sadhuragiri
தமிழகத்தில் சித்திரா பௌர்ணமியை முன்னிட்டு சதுரகிரி கோவிலுக்கு செல்ல பக்தர்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

தமிழ்நாட்டின் விருதுநகரில் உள்ள சதுரகிரி மலை மகாலிங்கம் கோவில் பிரசித்தமானது. இந்த கோவில் அமைந்துள்ள பகுதி வனத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ள நிலையில் பல்வேறு முக்கிய நாட்களிலும் சதுரகிரி செல்ல வனத்துறை அனுமதி அளித்து வருகிறது.

அந்த வகையில் நாளை சித்திரை மாதம் தொடங்கும் நிலையில் ஏப்ரல் 16ம் தேதி பௌர்ணமி நாள். சித்திரை பௌர்ணமி மகாலிங்கம் திருக்கோவிலில் வழிபாடு செய்ய முக்கியமான நாள் என்பதால் ஏப்ரல் 18 முதல் 5 நாட்களுக்கு சதுரகிரி செல்ல தமிழக வனத்துறை பக்தர்களுக்கு அனுமதி அளித்துள்ளது.