திங்கள், 27 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: செவ்வாய், 4 ஜூன் 2019 (19:41 IST)

முத்தமிழ் அறிஞருக்கு வந்த சோதனைய பாருங்க

நேற்று திமுக தலைவரும், முன்னாள் தமிழக முதல்வருமான கலைஞர் கருணாநிதி அவர்களது பிறந்தநாள் தமிழகம் முழுவதும் திமுகவினரால் கொண்டாடப்பட்டது.

அதற்காக பல இடங்களிலும் சுவரொட்டிகள், பேனர்கள் போன்றவை வைக்கப்பட்டிருந்தன. இந்நிலையில் ஒரு ஊரின் சுவரில் ’கலைஞர்’ என்பதற்கு பதிலாக ’களைஞர்’ என்று தவறாக எழுதியிருந்தது. அதை யாரோ புகைப்படம் எடுத்து இணையத்தில் பகிர, அது அனைத்து பக்கத்திலும் வைரலாகி வருகிறது. திமுகவை சேர்ந்தவர்கள் ‘முத்தமிழ் அறிஞருக்கு இப்படி ஒரு சோதனையா?’ என வருத்தத்தில் இருக்கிறார்கள்.