பிரஸ் கிளப்பில் பேனராக தொங்கிய பாலாவின் கார்ட்டூன்

Cartoonist Bala
sivalingam| Last Modified திங்கள், 6 நவம்பர் 2017 (17:30 IST)
பிரபல கார்ட்டுனிஸ்ட் பாலாவின் கார்ட்டூனை கண்டுகொள்ளமால் இருந்திருந்தால் அதை ஒருசில ஆயிரம் நபர்கள் மட்டுமே பார்த்திருப்பார்கள். ஆனால் அவரை கைது செய்ததன் மூலம் உலகம் முழுவதும் அந்த கார்ட்டூன் வைரலாகிவிட்டது.

 இந்த நிலையில் கார்ட்டுனிஸ்ட் பாலாவின் கைதுக்கு எதிர்ப்பு தெரிவித்த பத்திரிகையாளர் சங்கம், பாலாவை விடுதலை செய்ய வேண்டும் என்றும் அவர் மீது போட்ட வழக்கை வாபஸ் பெற வேண்டும் என்றும் தமிழக அரசை வலியுறுத்தி வருகின்றனர்.

இந்த நிலையில் சென்னை பிரஸ் கிளப் கட்டிடத்தில் இன்று பாலாவின் சர்ச்சைக்குரிய கார்ட்டூனை பிரமாண்டமான பேனராக மாற்றி பத்திரிகையாளர்கள் வைத்துள்ளனர். இதனால் அந்த பக்கம் போவார் வருபவர் அனைவரையும் இந்த கார்ட்டூன் திரும்பி பார்க்க வைத்துள்ளது.

webdunia

இதில் மேலும் படிக்கவும் :