செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Mahendran
Last Modified: திங்கள், 2 ஜனவரி 2023 (16:59 IST)

சொர்க்க வாசல் திறப்பதை புகைப்படம் எடுத்த பத்திரிகையாளர் திடீர் மரணம்!

dead
இன்று வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு அனைத்து பெருமாள் கோயிலிலும் சொர்க்கவாசல் திறக்கப்பட்டது. இந்த நிலையில் சொர்க்கவாசல் திறப்பு குறித்த புகைப்படத்தை எடுத்துக் கொண்டிருந்த பத்திரிக்கையாளர் ஒருவர் திடீரென மாரடைப்பில் மரணமடைந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 
 
தமிழகம் முழுவதும் உள்ள பெருமாள் கோவில்களில் இன்று சொர்க்கவாசல் திறக்கப்பட்டது என்பதும் அதிகாலை 3 மணி முதலே இதற்காக பக்தர்கள் வரிசையில் காத்து இருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது 
 
இந்த நிலையில் தனியார் பத்திரிகை ஆசிரியர் ஒருவர் சொர்க்கவாசல் திறப்பு குறித்த செய்தியை சேகரிக்கவும் புகைப்படம் எடுக்கவும் காத்து இருந்தார். அப்போது சொர்க்க வாசல் கதவு திறக்கப்பட்டது,  இதனையடுத்து அந்தப் பகுதியில் முண்டியடித்துக்கொண்டு புகைப்படம் எடுத்துக் கொண்டிருந்த போது திடீரென அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டது. 
 
இதனையடுத்து அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். சொர்க்க வாசல் திறப்பதை புகைப்படம் எடுத்துக் கொண்டிருந்த பத்திரிகையாளர் ஒருவர் திடீரென உயிரிழந்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது
 
Edited by Mahendran