செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Siva
Last Updated : திங்கள், 2 ஜனவரி 2023 (08:07 IST)

வைகுண்ட ஏகாதேசியை முன்னிட்டு சொர்க்க வாசல் திறப்பு: பக்தர்கள் பரவசம்!

sorka vasal
வைகுண்ட ஏகாதேசியை முன்னிட்டு சொர்க்க வாசல் திறப்பு: பக்தர்கள் பரவசம்!
இன்று வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு அனைத்து பெருமாள் கோயிலிலும் சொர்க்கவாசல் திறக்கப்பட்டதை அடுத்து பக்தர்கள் பரவசத்துடன் சுவாமி வழிபாடு செய்துவருகின்றனர். 
 
கோவிந்தா கோவிந்தா என்ற முழக்கம் ஸ்ரீரங்கம் பெருமாள் கோவிலில் இன்று சொர்க்கவாசல் திறக்கப்பட்டபோது எழுந்தது. அதேபோல் சென்னை திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோயில், திருப்பதி ஏழுமலையான் கோயில் உள்பட பல கோவில்களில் இன்று சொர்க்கவாசல் திறக்கப்பட்டதை அடுத்து ஏராளமான பக்தர்கள் சுவாமி வழிபாடு செய்தனர் 
 
சென்னை பார்த்தசாரதி கோயில் சொர்க்க வாசல் திறக்கப்பட்டதும் நீண்ட வரிசையில் காத்திருந்து பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. நாமக்கல் மலை அடிவாரத்தில் அமைந்துள்ள குடைவரைக் கோயிலான அரங்கநாதர் கோவிலில் சொர்க்கவாசல் திறக்கப்பட்டது
 
வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு ஸ்ரீரங்கம் ஸ்ரீரங்கநாதர் கோயிலில் பரமபத வாசல் என்னும் சொர்க்க வாசல் திறக்கப்பட்டதை அடுத்து கோவிலில் குவிந்த பக்தர்கள் ரங்கா ரங்கா என பக்தி பரவசத்துடன் வரிசையில் நின்று வழிபாடு செய்தனர்.
 
Edited by Siva