வைரமுத்துவை கண்டித்து ஜீயர் நாளை முதல் உண்ணாவிரதம்!

Last Modified புதன், 7 பிப்ரவரி 2018 (19:02 IST)
ஆண்டாள் குறித்து சர்ச்சை கருத்து தெரிவித்ததாக கவிஞர் வைரமுத்துவுக்கு எதிராக பல இந்து அமைப்புக்கள் கண்டனம் தெரிவித்தன. பலரும் போராட்டங்கள் நடத்தி வைரமுத்துவுக்கு நெருக்கடி கொடுத்தனர்.
 
இதனால் வைரமுத்து தனது கருத்துக்கு வருத்தம் தெரிவித்தார். இருந்தாலும் வைரமுத்து ஆண்டாள் சன்னதியில் வந்து மன்னிப்பு கேட்க வேண்டும் என ஸ்ரீவில்லிப்புத்தூர் ஜீயர் உண்ணாவிரதத்தை தொடர்ந்தார்.
 
இதனையடுத்து ஜீயர் தனது உண்ணாவிரதத்தை முடித்துக்கொண்டார். இதனையடுத்து வைரமுத்து பிப்ரவரி 3-ஆம் தேதிக்குள் ஆண்டாள் சன்னதிக்கு வந்து மன்னிப்பு கேட்காவிட்டால் தான் மீண்டும் உண்ணாவிரதத்தை ஆரம்பிப்பேன் என மீண்டும் நெருக்கடி கொடுத்தார் ஜீயர்.
 
ஆனால் வைரமுத்து மன்னிப்பு கேட்கவில்லை. இந்நிலையில் ஸ்ரீவில்லிப்புத்தூர் ஜீயர் சடகோப ராமனுஜம் வைரமுத்துவை கண்டித்து நாளை முதல் உண்ணாவிரதம் இருக்கப்போவதாக அறிவித்துள்ளார். இது வைரமுத்துவுக்கு மேலும் குடைச்சலை கொடுத்துள்ளது.

webdunia

இதில் மேலும் படிக்கவும் :