திங்கள், 23 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: புதன், 2 மே 2018 (14:34 IST)

சசிகலாவுக்கு சத்தியம் ; எடப்பாடிக்கு ஆதரவு - ஜெயானந்த் பரபரப்பு பேட்டி

சசிகலாவின் சகோதரர் திவாகரன் மகன் ஜெயானந்த் தினகரனுக்கு எதிராக அளித்த பேட்டி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

 
தினகரன் மற்றும் திவாகரன் ஆகியோர் ஒருவரை ஒருவர் கடுமையாக விமர்சனம் செய்து வருகின்றனர். சசிகலா சிறை சென்றதற்கே தினகரன் தான் காரணம் என திவாகரன் குற்றம் சாட்டினார்.  எடப்பாடி பழனிசாமிக்கு ஆதரவு தெரிவித்தாலும் தெரிவிப்பேனே தவிர தினகரனுக்கு ஆதரவு தெரிவிக்கமாட்டேன் என கூறினார். மேலும், மன்னார்குடியில் திடீரென திவாகரன் அம்மா அணி என்ற புதிய அரசியல் கட்சி ஒன்றை தொடங்கினார்.
 
இதுபற்றி கருத்து தெரிவித்த டிடிவி தினகரன், திவாகரனுக்கு உடல்நிலை தான் சரியில்லை என நினைத்தேன், இப்பொழுது மனநலமும் குன்றிவிட்டது. அவர் யாருடைய தூண்டுதலின் பெயரில் இப்படியெல்லாம் செயல்படுகிறார் என்பது மக்களுக்கு விரைவில் தெரியவரும் என கூறியிருந்தார்.
 
இந்நிலையில், திவாகரனின் மகன் ஜெயானந்த் இன்று செய்தியாளர்களிடம் பேசும்போது “ மூத்த நிர்வாகிகளை தினகரன் மதிக்கவில்லை. சசிகலா விட்டு சென்ற அதிமுகவை தினகரன் சரியாக வழிநடத்தவில்லை. தினகரன்பக்கம் இருப்பவர்கள் விரைவில் எங்கள் பக்கம் வருவார்கள். எடப்பாடி பழனிச்சாமி ஆட்சியில் நிறைய குறைபாடு இருக்கிறது. சசிகலா சிறைக்கு செல்லும்போது, எடப்பாடி பழனிச்சாமியை முதல்வராக நியமித்தார். மேலும், அவருக்கு ஆதரவாக செயல்பட வேண்டும் என அதிமுக எம்.எல்.ஏக்களிடம் சத்தியம் வாங்கினார். எங்களிடம் சத்தியம் வாங்கினார்” எனவேதான் எடப்பாடிக்கு ஆதரவாக கருத்து தெரிவித்தோம் என ஜெயானந்த் கூறினார்.