திங்கள், 6 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: ஞாயிறு, 29 ஏப்ரல் 2018 (13:13 IST)

அம்மா அணியின் பொதுச்செயலாளர் யார்? திவாகரன் பதில்

தினகரனுக்கு போட்டியாக சசிகலாவின் சகோதரர் திவாகரன் புதிய அரசியல் கட்சி ஒன்றை ஆரம்பித்து அதற்கு அம்மா அணி என்ற பெயரும் வைத்துள்ளார் என்பதை சற்றுமுன் பார்த்தோம். இந்த கட்சியின் அலுவலகம் நேற்று மன்னார்குடியில் திறக்கப்பட்டது. இந்த அலுவலகத்தில் பெரிய அளவில் ஜெயலலிதாவின் புகைப்படம் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
 
இந்த நிலையில் தினகரனின் அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் என்ற கட்சிக்கு சசிகலா பொதுச்செயலாளராகவும், தினகரன் துணை பொதுச்செயலாளராகவும் உள்ளனர்.
 
இந்த நிலையில் திவாகரன் கட்சிக்கு பொதுச்செயலாளர் யார் என்ற கேள்வி எழுந்தது. இதுகுறித்து பேட்டி ஒன்றில் கூறிய திவாகரன், அம்மா அணிக்கு தேவைப்பட்டால் நானே பொதுச்செயலாளராக இருப்பேன் என்று கூறியுள்ளார்.
 
இந்த நிலையில் திவாகரன் கட்சியில் இணைய ஒருசில தினகரன் ஆதரவு எம்.எல்.ஏக்கள் விருப்பம் தெரிவித்துள்ளதாக செய்திகள் வெளிவந்துள்ளது