ஞாயிறு, 29 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Mahendran
Last Modified: செவ்வாய், 12 டிசம்பர் 2023 (16:20 IST)

வெள்ள பாதிப்பு குறித்து விரைவில் அறிக்கை: மத்திய குழு தகவல்..!

Chennai Rain
வெள்ள பாதிப்பு குறித்து விரைவில் அறிக்கை அனுப்பப்படும் என தமிழகத்திற்கு வந்த மத்திய குழு தெரிவித்துள்ளது. 
 
சமீபத்தில் மிக்ஜாம் புயல் காரணமாக கடும் சேதம் ஏற்பட்ட நிலையில் இந்த சேதத்தை கணக்கிட  மத்திய குழு சென்னைக்கு வருகை தந்தது.  
 
அதன் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய போது ’2015 ஆம் ஆண்டுக்கு பிறகு தமிழ்நாடு அரசு பல்வேறு நடவடிக்கைகளை சிறப்பான முறையில் செய்துள்ளது என்றும் மாநில அரசு எடுக்கும் முயற்சியில்  நாங்கள் மிகவும் திருப்தியாகவும் மகிழ்ச்சியாகவும் இருக்கிறோம் என்றும் தெரிவித்தது 
 
சென்னையில் ஏற்பட்ட வெள்ள பாதிப்புகள் குறித்து நன்றாக அறிந்திருக்கிறோம் என்று கூறிய மத்திய குழு பாதிப்புகளிலிருந்து மக்கள் மீள மாநில அரசின் முயற்சிக்கு தங்களது பாராட்டுக்கள் என்றும் தெரிவித்துள்ளது. 
 
வெள்ள பாதிப்பு குறித்த விரிவான அறிக்கையை மூன்று நாட்கள் கள பார்வைக்கு பிறகு மத்திய அரசிடம் சமர்ப்பிப்போம் என்றும் மத்திய குழுவினர் தெரிவித்தனர்.
 
Edited by Mahendran