தொடர்புடைய செய்திகள்
- ரஜினி ஆதரவு குடுத்தா ஏத்துக்குவோம்! – முதல் ஆளாய் ரூட்டு போடும் அதிமுக?!
- ஏமாத்திட்டியே தலைவா.. நீங்கதான் முக்கியம்! – கலவையான கருத்துக்களுடன் ட்ரெண்டாகும் ரஜினி ஹேஷ்டேக்!
- நான் கட்சி தொடங்கல.. என்ன மன்னிச்சிடுங்க! – ரஜினி திடீர் அறிவிப்பால் பரபரப்பு!
- புதிதாக பதிவான இரு கட்சிகள்; எது ரஜினி கட்சி? – தொண்டர்கள் யூகம்!
- தமிழகத்தில் உருமாறிய கொரோனா: பீதியில் மக்கள்!!
பாஜகவினரின் கருத்தை ஏற்க முடியாது: ஜெயகுமார் திட்டவட்டம்!
தமிழக பாஜக தலைவர்களின் கருத்து ஏற்புடையதாக இருக்காது என அமைச்சர் ஜெயகுமார் தெரிவித்துள்ளார்.
அதிமுக - பாஜக கூட்டணியின் முதல்வர் வேட்பாளர் என்பது தொடர்பாக அதிமுக - பாஜக இடையே கூட்டணியில் பெரும் குழப்பம் ஏற்பட்டுள்ளது. பாஜக மாநில தலைவர் முருகன் முதல்வர் வேட்பாளர் யார்? என்பது குறித்து பாஜக தலைமை தான் அறிவிக்கும் என தெரிவித்துள்ளார்.
இந்நிலையில் அமைச்சர் ஜெயக்குமார் செய்தியாளர்களை சந்தித்த போது, சட்டசபை தேர்தலில் அதிமுக தலைமையில் தான் கூட்டணி அமைக்கப்படும் என கூறினார். அதிமுகவின் முதல்வர் வேட்பாளராக எடப்பாடி பழனிசாமியை ஏற்கும் கட்சிகளுடன் மட்டுமே கூட்டணி. கூட்டணி ஆட்சிக்கு வாய்ப்பில்லை என திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.
மேலும் மக்களவை தேர்தலுக்காக அமைக்கப்பட்ட கூட்டணியில் எந்த பிரச்சனையும் இல்லை. தமிழக பாஜக தலைவர்களின் கருத்து ஏற்புடையதாக இருக்காது. டெல்லி அறிவிப்பே இறுதியானது எனவும் குறிப்பிட்டுள்ளார்.
அடுத்த கட்டுரையில்
