Widgets Magazine
Widgets Magazine

ரெய்டில் சிக்கிய விவேக் - தினகரன் ஹேப்பி அன்ணாச்சி

செவ்வாய், 14 நவம்பர் 2017 (11:46 IST)

Widgets Magazine

சசிகலா குடும்பத்தினர் மற்றும் உறவினர் வீடுகளில் கடந்த சில நாட்களாக வருமான வரித்துறையினர் செய்த சோதனையில் பல கோடி ரூபாய் தொடர்பான ஆவனங்கள் சிக்கியுள்ளது.


 

 
ஆபரேஷன் கிளீன் மணி என பெயரிடப்பட்ட சோதனையில் சசிகலா குடும்பத்தினர் பினாமிகள் பெயரில் வாங்கிய சொத்துக்கள், முறைகேடான பணப்பரிவர்த்தனை தொடர்பான ஆவணங்களும் சிக்கியது. மொத்தமாக ரூ.1500 கோடி கணக்கில் வராத சொத்து ஆவணங்கள், கிலோக்கணக்கில் தங்க, வைரை நகைகள் சிக்கியதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
 
இதில், சசிகலாவுடன் சிறையில் இருக்கும் இளவரசியின் மகன் விவேக் வசமாக சிக்கியுள்ளார் எனக்கூறப்படுகிறது. ஜெயா தொலைக்காட்சி மற்றும் ஜாஸ் சினிமாஸை இவர்தான் நிர்வகித்து வருகிறார். இவரின் வீட்டில் கடந்த 9ம் தேதி அதிகாலை தொடங்கிய சோதனை நேற்று மாலை 4 மணியளவில் முடிவிற்கு வந்தது. இதில் பல ஆவணங்களை அதிகாரிகள் அள்ளி சென்றனர். மேலும், அவரை வருமான வரித்துறை அலுவலகத்திற்கு அழைத்து சென்று விசாரணை நடத்தினர். மேலும், மீண்டும் அவரிடம் விசாரணை நடக்கும் எனத் தெரிகிறது.
 
கடந்த 9ம் தேதி விசாரணை தொடங்கிய போது, தினகரன் வீட்டிலும் விசாரணை நடைபெற்றது எனக் கூறப்பட்டது. ஆனால், தன்னுடைய வீட்டில் எந்த சோதனையும் நடைபெறவில்லை. ஒரே ஒரு அதிகாரி வந்தார். அவரும் சென்றுவிட்டார் என தினகரன் விளக்கமளித்தார். உண்மையில், இதில், தினகரன் சிக்கவில்லை என்பதும், வருமான வரித்துறையினர் அவரை குறிவைக்க வில்லை என்பதும் தற்போது தெரியவந்துள்ளது.


 

 
அதாவது, ஆர்.கே.நகர் தேர்தலில் போட்டியிட்டது, வாக்களர்களுக்கு பணப்பட்டுவாடா செய்து சிக்கியது, இரட்டை இலை சின்னத்தை மீட்க பணம் கொடுத்ததாக எழுந்த வழக்கில் சிறைக்கு சென்றது, உறவினர்களை தள்ளி வைத்து தன்னிச்சையாக முடிவெடுத்தது என என தன்னுடைய செயல்கள் மூலம் தினகரன், குடும்பத்திற்கு கெட்ட பெயரை ஏற்படுத்திவிட்டார் என்ற புகாரை உறவினர்கள் தொடர்ந்து சசிகலாவிடம் கூறிவந்தனர். 
 
இதில் கோபமடைந்த சசிகலா, கணவரை சந்திக்க சிறையில் இருந்து பரோலில் வெளிவந்த போது, சில முக்கியமான பொறுப்புகளை விவேக் வசம் ஒப்படைத்தார். இதனால், சில வரவு செலவு கணக்குகளுக்காக விவேக்கிடம் அனுமதி பெற வேண்டிய நிலைக்கு தினகரன் தள்ளப்பட்டதாகவும், இதில் அவர் அதிருப்தி அடைந்ததாகவும் கூறப்படுகிறது. இந்நிலையில்தான் இந்த சோதனையை விவேக் சந்தித்துள்ளார்.
 
இதன் மூலம், நம்மிடம் ஒன்றுமில்லை. கடந்த 6 வருடமா என்ன நடந்தது என்று கூட எனக்கு தெரியாது. என் வீட்டில் ரெய்டு உடனே முடிந்துவிட்டது. ஆனால், அங்கே 5 நாட்கள் சோதனை நடக்கிறது எனில் எல்லாம் அங்குதான் இருக்கிறது. அவர்தான எல்லாத்தையும் பாக்குறாரு. இந்த சோதனையையும் சந்திக்கட்டும் என தனக்கு நெருக்கமானவர்களிடம் தினகரன் கூறியதாக செய்திகள் வெளிவந்துள்ளது.


Widgets Magazine

வெப்துனியா செய்திகள் உடனுக்குடன்!!! உங்கள் மொபைலில்... இங்கே க்ளிக் செய்யவும்Widgets Magazine
Widgets Magazine
news

முதல்வர் அணியும் செருப்பின் விலை ரூ.70 ஆயிரம்: என்ன ஒரு எளிமை!

கர்நாடக முதல்வர் சித்தராமையா தனது கால்களுக்கு அணிந்துள்ள செருப்பின் விலை ரூபாய் 70 ஆயிரம் ...

news

பாகுபலி போல் முயற்சித்த நபர்; தூக்கி வீசிய யானை

பாகுபலி படத்தில் நாயகன் யானை மீது ஏறுவது போன்று கேராளாவை சேர்ந்த நபர் ஒருவர் ஏற ...

news

சென்னையில் மீண்டும் மழை - பொதுமக்கள் அவதி

சென்னை மற்றும் அதன் புறநகர் பகுதிகளில் நேற்று இரவு முதல் மழை பெய்து வருகிறது.

news

தினகரனை கைது செய்ய வேண்டும்; சசிகலாவை வெளியே கொண்டு வர வேண்டும்: ஈவிகேஎஸ் இளங்கோவன் அதிரடி!

சசிகலா குடும்பத்தை குறிவைத்து நடக்கும் வருமான வரித்துறை சோதனையை பற்றி தான் தமிழகம் ...

Widgets Magazine Widgets Magazine