Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine

இன்னும் 2 நாட்களுக்கு கனமழை - வானிலை மையம் எச்சரிக்கை


Murugan| Last Modified வெள்ளி, 3 நவம்பர் 2017 (15:52 IST)
வங்க கடலில் நிலை கொண்டுள்ள குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம்  காரணமாக தமிழகத்தில் இன்னும் 2 நாட்களுக்கு கனமழை பெய்யும் என சென்னை வானிலை மையம் எச்சரித்துள்ளது.

 

 
இலங்கை அருகே வங்கக் கடலின் தென்மேற்கு பகுதியில் உருவான குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் இன்று தமிழக கடலோரத்தை நோக்கி நகர்ந்து வருகிறது.
 
இதன் காரணமாக, தமிழகத்தின் தென் மாவட்டங்களில் அனேக இடங்களில் பலத்தை மழை பெய்யும் என சென்னை வானில மைய இயக்குனர் எஸ்.பாலச்சந்திரன் இன்று காலை தெரிவித்தார். சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் ஆகிய மாவட்டங்களில் மிகவும் பலத்தை மழை பெய்யும் எனவும் அவர் கூறியுள்ளார்.
 
வருகிற 8ம் தேதி தமிழகத்தில் மழை இருக்கும் என இந்திய வானிலை மையம் தெரிவித்துள்ளது. அதில், அடுத்த 2 நாட்களுக்கு கனமழை இருக்கும் என சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.


இதில் மேலும் படிக்கவும் :