1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Updated : புதன், 2 ஜனவரி 2019 (18:14 IST)

தள்ளிப்போகிறதா திருவாரூர் இடைத்தேர்தல்..?

முன்னாள் திமுக தலைவர் கருணாநிதி கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் உயிரிழந்ததை அடுத்து அவரின் தொகுதியான திருவாரூர் தொகுதி காலியான தொகுதியாக அறிவிக்கப்பட்டது. 
 
இதையடுத்து அந்த தொகுதிக்கு இப்போது இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. வரும் ஜனவரி 28 ஆம் தேதி திருவாரூரில் தேர்தல் நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
 
ஆனால், சொன்ன தேத்யில் தேர்தல் நடைபெறும் அல்லது தள்ளிப்போகுமா என்ற கேள்வி எழுந்துள்ளது. ஆம், இடைத்தேர்தலுக்கான வேட்பு மனு தாக்கல் நாளை துவங்கும் நிலையில், தேர்தலை தள்ளி வைக்க வேண்டும் என சென்னை உயர் நீதிமன்றத்தில் முறையீடு செய்யப்பட்டது. 
 
அதில், கஜா புயலால் திருவாரூர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் இடைத்தேர்தலை தள்ளி வைக்க வேண்டும் என குறிப்பிடப்பட்டுள்ளதும். மேலும் இந்த முறையீடை மனுவாக தாக்கல் செய்து, நாளை விசாரணைக்கு வரும் என தெரியவந்துள்ளது. 
 
ஜனவரி 28 ஆம் தேதி இடைத்தேர்தல், வேட்பு மனுத்தாக்கல் செய்ய கடைசி நாள் 10 ஆம் தேதி, வேட்பு மனுக்களைத் திரும்பப் பெற கடைசி நாள் 14 ஆம் தேதி, வாக்கு எண்ணிக்கை 31 ஆம் தேதி என அனைத்தும் தெளிவாக அறிவிக்கப்பட்ட பின் இந்த முறையீடு சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.