மதுசூதனன் தோல்விக்கு யார் காரணம்? ஸ்லீப்பர் செல்களா? என்பது இன்று தெரிந்துவிடும்

Last Updated: திங்கள், 25 டிசம்பர் 2017 (09:53 IST)
ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் தினகரனிடம் அதிமுகவின் வேட்பாளர் மதுசூதனன் தோல்வியுற்றதை அதிமுக தலைமை இன்னும் ஜீரணிக்க முடியாமல் உள்ளது. தினகரனுக்கு இணையாக பணம் செலவு செய்தும், பிரச்சாரம் செய்தும் மக்களிடம் எடுபடாமல் போனதற்கு என்ன காரணம் என்று ஆலோசனை செய்ய இன்று அக்கட்சியின் அவசர ஆலோசனை கூட்டம் கூடவுள்ளது.

அ.தி.மு.க.வின் ஒருங்கிணைப்பாளரான துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளரான முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி கூட்டும் இந்த கூட்டத்தில் கட்சியின்
முக்கிய நிர்வாகிகள், அமைச்சர்கள் மற்றும் கட்சியின் அனைத்துப் பிரிவு நிர்வாகிகள், எம்.எல்.ஏ.க்கள், எம்.பி.க்களையும் பங்கேற்கும்படி தலைமைக் கழகம்
உத்தரவிட்டுள்ளது.

தினகரன் முன்னிலையில் இருக்கும்போதே வாழ்த்து கூறிய செங்குட்டுவன் எம்பி, பின்னர் தினகரனை நேரில் சந்தித்து வாழ்த்து கூறியது ஆளும் தரப்பை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது. இந்த தேர்தலின் தோல்விக்கு தினகரன் அணியின் ஸ்லீப்பர் செல்கள் காரணமா? என்பது இன்றைய கூட்டத்தில் கலந்து கொள்ளும் நிர்வாகிகள் மற்றும் எம்.எல்.ஏ, எம்பிக்களின் எண்ணிக்கையின் மூலம் தெரிந்து கொள்ளலாம் என்று அதிமுக வட்டாரங்கள் கூறுகின்றன


webdunia

இதில் மேலும் படிக்கவும் :