வியாழன், 21 நவம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Prasanth Karthick
Last Modified: ஞாயிறு, 30 ஜூலை 2023 (09:22 IST)

என் வெற்றி செல்லாதா? உச்சநீதிமன்றம் சென்ற ஓ.பி.ரவீந்திரநாத்!

ravindranath
2019ம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலில் ஓ.பி.ரவீந்திரநாத் பெற்ற வெற்றி செல்லாது என உயர்நீதிமன்றம் அளித்த தீர்ப்பிற்கு உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளார்.



கடந்த 2019ம் ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தலில் தேனி தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றவர் ஓ.பன்னீர்செல்வம் மகன் ஓ.பி.ரவீந்திரநாத். இந்நிலையில் வேட்புமனுவில் அவர் உண்மையான தகவல்களை தெரிவிக்கவில்லை என்றும், போலியான வருமான விவரங்களை தெரிவித்ததாலேயே அவரது வேட்பு மனு ஏற்றுக் கொள்ளப்பட்டது என்றும் வழக்குத் தொடரப்பட்டது.

இந்த வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம் 2019 நாடாளுமன்ற தேர்தலில் ஓ.பி.ரவீந்திரநாத் பெற்ற வெற்றி செல்லாது என தீர்ப்பளித்துள்ளது. அதிமுகவிலிருந்து வெற்றி பெற்ற ஒரே எம்.பியான ஓ.பி.ரவீந்திரநாத் இதை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு மனு தாக்கல் செய்துள்ளார்.

அடுத்த நாடாளுமன்ற தேர்தல் 2024 மே மாதத்தில் நடைபெற உள்ள நிலையில் அதற்குள் இந்த மேல்முறையீடு மனு விசாரிக்கப்பட்டு தீர்ப்பு வழங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Edit by Prasanth.K