ஞாயிறு, 22 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Sinoj
Last Modified: செவ்வாய், 25 ஜூலை 2023 (17:00 IST)

மணிப்பூர் பழங்குடி பெண்களுக்கு கொடூரம்...7 வது குற்றவாளி கைது!

Manipur
மணிப்பூர் மாநிலத்தில் பெண்களுக்கு நடந்த வன்முறை தொடர்பாக இதுவரை   பேர் கைது செய்யப்பட்ட நிலையில் மேலும் ஒருவரை போலீஸார் கைது செய்துள்ளனர்.

மணிப்பூர் மாநிலத்தில் சில மாதங்களுக்கு முன்பு அங்குள்ள மெய்தி மற்றும் குகி ஆகிய இரண்டு சமூகத்தினருக்கு இடையே திடீர் வன்முறை ஏற்பட்டது.

அந்த மா நிலம் முழுவதும் கலவரம் வெடித்த நிலையில், அங்குள்ள கட்டிடங்கள், வீடுகள் உள்ளிட்ட பல இடங்களுக்கு தீ வைக்கப்பட்டன. இந்த வன்முறை தொடர்பாக 100 க்கும் மேற்பட்டோர் பலியானதாக தகவல் வெளியானது.

சமீபத்தில், 2 பெண்களை நிர்வாணப்படுத்தி ஒரு கும்பல் சாலையில் இழுத்துச் சென்ற வீடியோ பரவலான நிலையில், பிரதமர் மோடி, உச்சநீதிமன்ற நீதிபதி, அரசியல் கட்சித்தலைவர்கள் எதிர்க்கட்சிகள் உள்ளிட்ட பலரும் இதற்கு கண்டனம் தெரிவித்தனர்.

இந்த கொடூரம் தொடர்பாக இதுவரை 6 பேரை போலீஸார் கைது செய்திருந்தனர். இந்த நிலையில் இச்சம்பவம் தொடர்பாக 7 மேலும் ஒருவரை போலீஸார் கைது செய்துள்ளனர்.