வெள்ளி, 22 நவம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sinoj
Last Modified: சனி, 3 பிப்ரவரி 2024 (13:50 IST)

மத்திய அரசின் பட்ஜெட்டுக்கு எதிராக இந்திய விவசாய தொழிலாளர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்

farmers protest
மத்திய அரசின் பட்ஜெட்டை கண்டித்து தருமபுரி மாவட்டம் அரூர் அருகே அகில இந்திய விவசாய தொழிலாளர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் நடத்தி வருகின்றனர்.
 
மத்தியில் பிரதமர் மோடி தலைமையிலான பாஜக ஆட்சி நடந்து வரும் நிலையில்,  சமீபத்தில் இடைக்கால பட்ஜெட் கூட்டத்தொடர் குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு தலைமையில் தொடங்கியது.  அடுத்த நாள் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் இடைக்கால பட்ஜெட்டை வாசித்தார். வரும் பாராளுமன்ற தேர்தலை அடுத்து, முழுமையாக பட்ஜெட்டை பாஜக அறிவிக்கும் என்று தெரிவிக்கப்பட்டது.

இதற்கு பிரதமர் மோடி உள்ளிட்ட பாஜகவினர் மற்றும் கூட்டணி கட்சித் தலைவர்கள் வரவேற்பு தெரிவித்தனர்.

ஆனால், காங்கிரஸ், திமுக கடுமையான விமர்சனம் தெரிவித்தன.

இந்த நிலையில்,  மத்திய அரசின் பட்ஜெட்டை கண்டித்து தருமபுரி மாவட்டம் அரூர் அருகே அகில இந்திய விவசாய தொழிலாளர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் நடத்தி வருகின்றனர்.

இதுகுறித்து விவசாய தொழிலாளர் சங்கம் மாநில பொதுச் செயலாளர் அமிர்தலிங்கம் கூறியதாவது: நாட்டில் வாழ்ந்து கொண்டிருக்கும் 80 கோடி ஏழைகளைப் பற்றி கவலைப்படாமல் கார்ப்பரேட் கம்பெனிகளின் நலன்களுக்காக சமர்ப்பிக்கப்பட்ட ஒரு நிதிநிதி அறிக்கைதான் அது என்று தெரிவித்துள்ளார்.

தமிழ்நாட்டின் வளர்ச்சி திட்டங்களுக்கு உரிய நிதி ஒதுக்காத மத்திய அரசின் ஓரவஞ்சனையை எதிர்த்து பிப்ரவரி 8 ஆம் தேதி நாடாளுமன்ற வளாகத்தில் திமுக எம்பிக்கள் கருப்பு சட்டை அணிந்து ஆர்ப்பாட்டம் நடத்தவுள்ளதாக திமுக அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.