1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Mahendran
Last Modified: சனி, 3 பிப்ரவரி 2024 (10:52 IST)

திராவிடம் இல்லாத அரசியலை முன்னெடுக்கும் விஜய்.. அரசியல் வல்லுனர்களின் கருத்து..!

தமிழகத்தில் கடந்த 50 ஆண்டுகளாக திராவிட அரசியல் நடைபெற்று வரும் நிலையில் கடந்த சில ஆண்டுகளாக திராவிடத்திற்கு எதிராக விமர்சனம் செய்யும் போக்கும் அதிகரித்து வருகிறது

புதிதாக அரசியல் கட்சி ஆரம்பிப்பவர்கள் திராவிடம் என்ற பெயரில் தான் கட்சி ஆரம்பித்து வருகின்றனர். திராவிடர் கழகம், திராவிட முன்னேற்ற கழகம், அண்ணா திராவிட முன்னேற்ற கழகம், மறுமலர்ச்சி திராவிட முன்னேற்ற கழகம், தேசிய முற்போக்கு திராவிட முன்னேற்றக் கழகம், ஆகிய கட்சிகள் திராவிடம் என்ற பெயரில்தான் இருந்தது

இந்த நிலையில் விஜய் தனது கட்சியில் தமிழக வெற்றி கழகம் என்று ஆரம்பித்துள்ளதை அடுத்து அவர் மிகவும் கவனமாக திராவிடம் என்ற வார்த்தையை தவிர்த்து உள்ளதாக அரசியல் வல்லுநர்கள் கூறுகின்றனர். திராவிடம் இல்லாமல் தமிழகத்தில் அரசியல் செய்ய முடியாது என்ற ஒரு கருத்து இருந்தாலும் கடந்த சில ஆண்டுகளாக திராவிடம் என்ற வார்த்தையை வெறுக்கும் நபர்களின் அதிகரித்து வருகிறது.

திராவிடம் என்றாலே தமிழ்நாடு, ஆந்திரா, கர்நாடகம், கேரளா ஆகிய மாநிலங்களை கொண்டது தான். ஆனால் தற்போது அந்த மாநிலங்கள் எல்லாம் திராவிடம் என்ற வார்த்தையை ஏற்றுக் கொள்ளாத நிலையில், தமிழக மட்டும் எதற்காக திராவிடம் என்ற வார்த்தையை தொங்கிக் கொண்டிருக்க வேண்டும் என்று தான் இன்றைய இளைஞர்களின் கேள்வியாக உள்ளது

அந்த இளைஞர்களை குறி வைத்து தான் விஜய் கட்சி ஆரம்பித்துள்ளதால் அவர் மிகவும் கவனமாக திராவிடம் என்ற வார்த்தையை தவிர்த்து உள்ளதாக கூறப்படுகிறது.

Edited by Mahendran