திங்கள், 3 மார்ச் 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Siva
Last Updated : திங்கள், 3 மார்ச் 2025 (09:37 IST)

தமிழகத்தில் இதுவரை 250 ஆசிரியர்கள் போக்சோ சட்டத்தில் கைது.. கேசி வீரமணி குற்றச்சாட்டு..!

KC Veeramani
தமிழகத்தில் பெண் குழந்தைகளுக்கான பாலியல் வன்முறை அதிகரித்து வரும் நிலையில், இந்த வன்முறைகளை ஆசிரியர்களே செய்வது கொடூரத்தின் உச்சமாக உள்ளது.

இந்த நிலையில், கடந்த நான்கு ஆண்டுகளில் 250 ஆசிரியர்கள் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு, சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர் என முன்னாள் அமைச்சர் கே.சி. வீரமணி குற்றம் சாட்டியுள்ளார்.

மேலும், போதைப் பொருட்களின் பழக்கம் தமிழகத்தில் அதிகரித்துவிட்டதாகவும், இதுவே பெண் குழந்தைகளுக்கு பாலியல் தொல்லை அதிகரிக்க காரணமாக உள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

திமுக கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றாததால், அரசு ஊழியர்கள் உட்பட பலர் போராடி வருகின்றனர். மேலும், பகுதி நேர ஆசிரியர்களை நிரந்தரமாக்குவதாக சட்டத்தில் இடம் இல்லாத பொய்யான வாக்குறுதிகளை திமுக அளித்து, அவர்களை ஏமாற்றி வருகிறது என்றும் கே.சி.மணி திமுக அரசு மீது குற்றம் சாட்டியுள்ளார்.

Edited by Siva