நீட் தேர்வுக்கான ஹால் டிக்கெட் கிடைப்பது எப்போது? தேசிய தேர்வு முகமை தகவல்..!
ஒவ்வொரு ஆண்டும் இளநிலை மருத்துவ படிப்புக்காக நீட் தேர்வு நடத்தப்பட்டு வருகிறது. இந்த ஆண்டு நீட் தேர்வு குறித்த தகவல்களை தேசிய தேர்வு முகமை தெரிவித்துள்ளது.
2025-26ஆம் கல்வி ஆண்டுக்கான நீட் தேர்வு, மே 4ஆம் தேதி நாடு முழுவதும் நடைபெற உள்ளது. இந்த தேர்வை தமிழ், ஆங்கிலம், ஹிந்தி உள்பட 13 மொழிகளில் மாணவர்கள் எழுதலாம் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்தத் தேர்வுக்கான விண்ணப்ப பதிவு பிப்ரவரி 7ஆம் தேதி தொடங்கி நிலையில், மார்ச் 7ஆம் தேதியுடன் நிறைவடையும்.
இந்தத் தேர்வுக்கான ஹால் டிக்கெட் மே 1ஆம் தேதி வெளியிடப்படும். மாணவர்கள், தேசிய தேர்வு முகமை அதிகாரப்பூர்வ இணையதளத்தில் சென்று பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், இந்த தேர்வை எழுத மாணவர்கள் ஒரே ஒருமுறை மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. தேர்வுக்கு விண்ணப்பிக்கும் வழிமுறைகள், கட்டணம் உள்ளிட்ட தகவல்களை தேசிய தேர்வு முகமை இணையதளத்தில் அறிந்து கொள்ளலாம்.
இந்த கல்வியாண்டுக்கான நீட் தேர்வு முடிவு, ஜூன் 14ஆம் தேதி வெளியிடப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
Edited by Mahendran