வெள்ளி, 27 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Siva
Last Updated : ஞாயிறு, 3 செப்டம்பர் 2023 (08:29 IST)

இன்பநிதி பாசறை போஸ்டர்: திமுக மாவட்ட நிர்வாகிகள் மீது நடவடிக்கை!

தமிழக விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலினின் மகன் இன்பநிதி பெயரில் பாசறை அமைத்து போஸ்டர் ஒட்டிய திமுக மாவட்ட நிர்வாகிகள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளன. 
 
நேற்று புதுக்கோட்டையில் திடீரென அமைச்சர் உதயநிதியின் மகன் இன்பநிதி பாசறை என்ற பெயரில் போஸ்டர் ஒட்டப்பட்டது. செப்டம்பர் 24ஆம் தேதி மக்களுக்கான நலத்திட்ட உதவிகள் இந்த பாசறை மூலம் செய்யப்படும் என்றும் அறிவிக்கப்பட்டிருந்தது 
 
இது குறித்த புகைப்படங்கள் இணையதளத்தில் வைரல் ஆகி வந்தன. கருணாநிதி குடும்பத்தின் நான்காவது தலைமுறை அரசியல்வாதியா என்று இன்பநிதி குறித்து பலர் கேள்வி எழுப்பினர். 
 
இந்த நிலையில் அமைச்சர் உதயநிதி மகன் இன்பநிதி போஸ்டர் ஒட்டிய புதுக்கோட்டை திமுக மாவட்ட நிர்வாகிகள் இரண்டு பேர் கட்சியில் இருந்து நீக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளன
 
Edited by Siva