ஞாயிறு, 22 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sinoj
Last Updated : சனி, 2 செப்டம்பர் 2023 (20:24 IST)

ரஜினிகாந்த் உடன் முன்னாள் முதல்வர் ஓபிஎஸ் சந்திப்பு

rajini- pannerselvam
முன்னாள் முதல்வர் ஓபிஎஸ் உள்ளிட்டவர்களை அதிமுகவில் இருந்து நீக்கியது செல்லும் என்று சமீபத்தில் நீதிமன்றம் தீர்ப்பளித்த நிலையில் இன்று  ஓ.பன்னீர்செல்வம், நடிகர்   ரஜினிகாந்தை நேரில் சந்தித்துள்ளார்.

அதிமுக பொதுக்குழு தீர்மானங்கள் செல்லும் என  சென்னை நீதிமன்றம் உத்தரவிட்டு, முன்னாள் முதல்வர் ஓபிஎஸ் உள்ளிட்டவர்களை அதிமுகவில் இருந்து  நீக்கிய சிறப்பு தீர்மானத்திற்கு  நீதிமன்றம் மறுப்பு தெரிவித்தது.

ஏற்கனவே அமமுக பொதுச்செயலாளர் தினகரனுடன் இணைந்து அரசியலில் பயணிக்கப் போவதாக  ஓபிஎஸ் அறிவித்த நிலையில்,  நீதிமன்றத் தீர்ப்பினால், அவர் தினகரன் மற்றும் சசிகலாவுடன் இணைந்து அரசியலில் இணைந்து பணியாற்றுவாரா? அல்லது தினகரனைப் போல் தனிக்கட்சி ஆரம்பிப்பாரா? என கேள்வி எழுந்துள்ளது.

இந்த நிலையில், முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் இன்று சென்னை போயஸ் கார்டனில் உள்ள இல்லத்தில் நடிகர் ரஜினிகாந்த்தை நேரில் சந்தித்து பேசினார். இது மரியாதை நிமித்தமான சந்திப்பு எனத் தகவல் வெளியாகிறது.