Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine

கடமையை செய்ய தவறினால் ராஜினாமா செய்வேன்; ரஜினிகாந்த்

duty
Last Updated: ஞாயிறு, 31 டிசம்பர் 2017 (13:12 IST)
வாக்குறுதிகளை நிறைவேற்ற தவறினால், மூன்று ஆண்டுகளில் ராஜினாமா செய்வேன் என ரஜினிகாந்த் தெரிவித்துள்ளார்.
சென்னை கோடம்பாக்கத்தில் உள்ள ராகவேந்திரா திருமண மண்டபத்தில் 6வது நாளாக, நடிகர் ரஜினி தனது ரசிகர்களை சந்தித்து வருகிறார். ரஜினிகாந்த் நீண்ட காலமாக அரசியலுக்கு வருவாரா? மாட்டாரா? என எதிர்பார்ப்பு இருந்து வந்தது. இந்த வார ரசிகர் சந்திப்பில் பேசிய ரஜினிகாந்த் வரும் 31 ம் தேதி அரசியல் நிலைப்பாடு குறித்து அறிவிப்பேன் என்றார். இதனால் ரஜினி என்ன முடிவு எடுப்பார் என பெரும் எதிர்பார்ப்பு ஏற்பட்டது.
 
இந்நிலையில் இன்று ரசிகர்களிடம் பேசிய ரஜினிகாந்த் நான் அரசியலுக்கு வருவது உறுதி. இது காலத்தின் கட்டாயம். வரும் சட்டசபை தேர்தலுக்கு முன் தனிக்கட்சி துவங்கி, 234 தொகுதிகளிலும் போட்டியிட உள்ளேன் என்று கூறியுள்ளார்.உண்மை, உழைப்பு உயர்வு தான் எனது மந்திரம். நல்லதே நினைப்போம், நல்லதையே செய்வோம், நல்லதே நடக்கும் என்பது தான் எனது கொள்கை. ஜனநாயக போரில் நம்ம படையும் இனி இருக்கும். பல்வேறு அரசியல் நிகழ்வுகளால் தமிழ்நாட்டுக்கும், தமிழ்மக்களும் பெரும் அவமானம் நிகழ்ந்திருக்கிறது. மக்கள் பெரிதும் துயரப்பட்டு வருகின்றனர்.
 
இந்த நேரத்தில், நான் இந்த முடிவை எடுக்க வேண்டும். இது காலத்தின் கட்டாயம். மக்களுக்கு நல்லது செய்யவே அரசியலில் இறங்குகிறேன். அப்படி முடியவில்லை என்றால் 3 ஆண்டுகளில் ராஜினாமா செய்து விடுவேன் என்று சூப்பர்ஸ்டார் கூறியுள்ளார். ரஜினிகாந்தின் இந்த அரசியல் முடிவை ரசிகர்கள் பட்டாசு வெடித்து கொண்டாடி வருகின்றனர். 


இதில் மேலும் படிக்கவும் :