தேர்தலில் யாருக்கு ஆதரவு? அழகிரி பரபரப்பு பேட்டி

alagiri
Last Modified புதன், 27 பிப்ரவரி 2019 (09:33 IST)
இந்த மக்களவை தேர்தலில் தனது ஆதரவு யாருக்கு என முதன்முறைகாக அழகிரி கருத்து தெரிவித்துள்ளார்.


மக்களவை தேர்தலை முன்னிட்டு அனைத்து கட்சிகளுக்கு கூட்டணி பேச்சுவார்த்தையில் தீவிரமாக ஈடுப்பட்டுள்ளன. 
 
 
அதிமுக, பாஜகவிற்கு 5 தொகுதி, பாமகவிற்கு 7 தொகுதி என தொகுதி பங்கீட்டை வெற்றிகரமாக முடித்தாலும், தேமுதிக முரண்டு பிடிப்பதால் அந்த கட்சியுடனான தொகுதி பங்கீடு இழுபறியில் உள்ளது. 
 
காங்கிரசுடன் கூட்டணியை உறுதி செய்து, புதுச்சேரி மற்றும் தமிழகத்தில் 9 தொகுதி என மொத்தம் 10 தொகுதிகளை வழங்கியுள்ளது. இந்தியன் முஸ்லிம் லீக், கொங்கு தேசிய மக்கள் கட்சிக்கு தலா ஒரு தொகுதி வழங்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் இந்த தேர்தலில் உங்களின் ஆதரவு யாருக்கு என முன்னாள் மத்திய அமைச்சரும், கருணாநிதியின் மூத்த மகனுமான அழகிரியிடம் கேள்வி கேட்கப்பட்டது. இதற்கு பதிலளித்த அவர் எனது முடிவை பிறகு சொல்கிறேன். ஆனால் 
தி.மு.க-காங்கிரஸ் கூட்டணிக்கு வெற்றி வாய்ப்பு இருக்கு என நினைக்கிறேன் என கூறினார்.


இதில் மேலும் படிக்கவும் :