செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: சனி, 24 மார்ச் 2018 (12:34 IST)

கள்ளக்காதலை கைவிடாத மனைவி : கொடூரமாக கொலை செய்த கணவன்

தன்னையும், தனது குழந்தைகளையும் சரிவர கவனிக்காமல் பல ஆண்களுடன் பழகி வந்த தனது மனைவியை, அவரின் கணவர் கத்தியால் குத்தி கொலை செய்த விவாகரம் சென்னை சூளைமேட்டு பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

 
கேரள மாநிலத்தை சேர்ந்த செனு என்பவர் சென்னை சூளைமேடு பகுதியில் குடும்பத்துடன் தங்கியிருந்து டிரைவர் வேலை பார்த்து வந்தார். அவரின் மனைவி ஷாலினி நர்ஸாக பணிபுரிந்து வந்தார். நோயாளிகளின் வீட்டிற்கு சென்று அவர் சிகிச்சையளித்து வந்தார். அந்நிலையில், பல ஆண்களுடன் ஷாலினுக்கு பழக்கம் ஏற்பட்டுள்ளது. இதனால் சரிவர கணவரையும், தனது குழந்தைகளையும் அவர் கவனிக்கவில்லை எனத் தெரிகிறது.
 
இதனால் ஆத்திரம் அடைந்த செனு அவரை கண்டித்ததுடன், வேலைக்கு செல்லாமல் வீட்டிலேயே இரு எனக்கூறியதாக தெரிகிறது. ஆனாலும், ஷாலினி தொடர்ந்து வேலைக்கு சென்று வந்துள்ளார். இதனால், செனுவுக்கும், ஷாலினுக்கும் அடிக்கடி தகராறு நடந்துள்ளது.
இந்நிலையில், நேற்று மாலை வேலைக்கு சென்று விட்டு வீட்டிற்கு தாமதமாக ஷாலினி வர, செனுவுக்கும், அவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. அப்போது, ஷாலினியை செனு கடுமையாக தாக்க, காப்பாற்றுங்கள் காப்பாற்றுங்கள் என ஷாலினி சத்தம் போட்டுள்ளார். 
 
ஷாலினியின் அலறல் கேட்டு அக்கம் பக்கத்தினர் ஓட்டி வந்தனர். ஆனால், கதவை உள்பக்கம் தாழ்ப்பாள் போட்ட செனு, தொடர்ந்து ஷாலினியை தாக்கியுள்ளார். எனவே, அக்கம் பக்கத்தினர் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். ஆனால், அவர்கள் வருவதற்குள் வீட்டிலிருந்த கத்தியை எடுத்து ஷாலினியை குத்தி செனு கொலை செய்துள்ளார். 
 
அதையடுத்து அங்கு வந்த போலீசார் செனுவை கைது செய்து விசாரணை நடத்தினார். பல ஆண்களுடன் தொடர்பு வைத்திருந்ததோடு, தன்னையும், தன் குழந்தைகளையும் சரிவர கவனிக்காததால் ஆத்திரத்தில் ஷாலினியை கொலை செய்துவிட்டதாக அவர் வாக்குமூலம் அளித்தார்.
 
இந்த சம்பவம் சூளைமேடு பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.