1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Mahendran
Last Modified: சனி, 5 ஆகஸ்ட் 2023 (09:14 IST)

கேரளாவில் இருந்து கடத்தப்பட்டு வந்த மனித உறுப்புகள்: நாக்கு, கல்லீரல், இதயம் இருந்ததால் அதிர்ச்சி..!

கேரளாவில் இருந்து தமிழகத்திற்கு மனித உறுப்புகளை கடத்தி வந்த காரை போலீசார் மடக்கி பிடித்து அதில் உள்ள மூன்று பேர்களை கைது செய்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 
 
கேரளாவில் இருந்து தேனிக்கு வந்த சந்தேகத்திற்குரிய கார் ஒன்று உத்தமபாளையம் பகுதியில் சுற்றித்திரிந்தது. இதனால் சந்தேகம் அடைந்த காவல்துறையினர் அந்த காரை சுற்றி வளைத்து பிடித்தனர் 
 
இதன்பிறகு அந்த காரை சோதனை செய்ததில் மனித உறுப்புகளான நாக்கு கல்லீரல் இதயம் ஆகியவை இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.  இது குறித்த விசாரணையில் மனித உறுப்புகளை வீட்டில் வைத்தால் செல்வம் பெருகும் என பூஜை செய்து கேரளாவில் இருந்து எடுத்துவரப்பட்டதாக தகவல் வெளியாகி உள்ளன. 
 
இது குறித்து காவல்துறையினர் காரில் இருந்த மூன்று பேர்களை கைது செய்து அவர்களிடம் தீவிரமாக விசாரணை செய்து வருகின்றனர். கேரளாவில் இருந்து மனித உறுப்புகள் கொண்ட கார் கடத்தப்பட்டு வந்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
 
Edited by Mahendran